திமுகவுக்கு 4 மேயர்-காங்கிரசுக்கு 2

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடம் என்ற விவரத்தை முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டார். அதன்படிமொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளில் திமுகவுக்கு 4 மேயர் பதவிகளும் காங்கிரசுக்கு 2 மேயர் பதவிகளும்ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல் நிலை நகராட்சித் தலைவர் பதவிகளை பொறுத்தவரை (மொத்தம் 102 இடங்கள்) திமுகவுக்கு 52,காங்கிரசுக்கு 25, பாமகவுக்கு 12, மார்க்சிஸ்ச் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள்ஒதுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் நிலை நகராட்சித் தலைவர் பதவிகளை பொறுத்தவரை (மொத்தம் 50 இடங்கள்) திமுகவுக்கு 23,காங்கிரசுக்கு 13, பாமகவுக்கு 6, மார்க்சிஸ்ச் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 இடங்கள்ஒதுக்கப்பட்டுள்ளன.

பேரூராட்சித் தலைவர் பதவிகளை பொறுத்தவரை (மொத்தம் 561 இடங்கள்) திமுகவுக்கு 284, காங்கிரசுக்கு 134,பாமகவுக்கு 70, மார்க்சிஸ்ச் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 45, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 28 இடங்கள்ஒதுக்கப்பட்டுள்ளன.

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளை பொறுத்தவரை (மொத்தம் 385 இடங்கள்) திமுகவுக்கு 185, காங்கிரசுக்கு95, பாமகவுக்கு 60, மார்க்சிஸ்ச் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 20 இடங்கள்ஒதுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை பொறுத்தவரை (மொத்தம் 29 இடங்கள்) திமுகவுக்கு 12,காங்கிரசுக்கு 7, பாமகவுக்கு 5, மார்க்சிஸ்ச் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள்ஒதுக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி மேயர் பதவிகளை பொறுத்தவரை (மொத்தம் 6 இடங்கள்) திமுகவுக்கு 4ம், காங்கிரசுக்கு 2இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாநகராட்சியில் தனித்துப் போட்டி என்று போர்க் கொடி தூக்கிய பாமக சாந்தமடைந்து உடன்பாட்டில்கையெழுத்திட்டுவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+