பார்வர்ட் பிளாக்கும் போலி லெட்டர் பேடும்
மதுரை:
பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவராக நடிகர் கார்த்திக்கே நீடிப்பதாக அக் கட்சி அறிவித்துள்ளது.
நேற்று முன் தினம் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தேவராஜன் பெயரில் ஒருஅறிக்கை வெளியானது.அதில், கார்த்திக் தமிழக தலைவர் பதவியில் இருந்தும் மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியின்அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
ஆனால், கட்சியின் தலைவர் பிஸ்வாசுக்கு கார்த்திக் மிக நெருக்கமாக இருந்து வரும் நிலையில் அவர் கட்சியைநீக்கப்பட்டதாக வந்த தகவல் நிருபர்களையே குழப்பியது.
இந் நிலையில் அகில இந்திய பொதுச் செயலாளர் தேவராஜன் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
கார்த்திக்கை கட்சியை விட்டும் பதவியை விட்டும் நீக்கிவிட்டதாக தவறாக செய்தி வெளியாகியுள்ளது. அவர்தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்கிறார். கட்சியின் வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் தான், கட்சியின்லெட்டர் பேடை போலியாகத் தயாரித்து இது போன்ற அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் தான் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் மீதுமோசடி வழக்கு பதிவு செய்யப்படும்.
உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அல்லது தனித்துப் போட்டியா என்பது குறித்து சிலநாட்களில் முடிவு செய்யப்படும் என்றார்.
கார்த்திக் கட்சியில் போலி லெட்டர் பேடு அரசியல் நடப்பது இது முதன்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் கார்த்திக்கின் வீட்டில் இருந்தே எல்லா பத்திரிக்கைகளுக்கும் ஒரு பேக்ஸ் வந்தது. அதில், உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்று கூறப்பட்டிருந்தது.
இதை மறுநாள் நிருபர்களை வீட்டுக்கு கூப்பிட்டு மறுத்தார் கார்த்திக்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications