ஜெவின் சிக்குன் குனியா லிஸ்ட் பொய்-கருணாநிதி
சென்னை:
உயிரோடு இருப்பர்களையும் இறந்தவர் பட்டியலில் சேர்த்து விட்டார் ஜெயலலிதா என முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,சிக்குன் குனியாவால் இறந்தவர்கள் பட்டியலை வெளியிட சொன்னால், உயிரோடு இருப்பவர்களையும்இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து கொடுத்துள்ளார் ஜெயலலிதா.
சிக்குன் குனியா நோயால் இறந்தவர்கள் என்று ஜெயலலிதாவால் குறிப்பிடப்பட்டுள்ள திருச்சி மாவட்டதுறையூரை சேர்ந்த ராமசாமி என்பவர் உயிரோடு இருக்கிறோர். கோவை மாவட்டம் பேரூரை சேர்ந்த குப்புசாமிசெட்டியார், மருதூர் காரணி அம்மாள், சேலம் மகாலிங்கம், அய்யம் பெருமாள் ஆயோர் உயிரோடு தான்இருக்கிறார். ஆனால் ஜெயலலிதா இவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.
மேலும் சேலம் மாவட்டத்தில் 2005ம் ஆண்டு இறந்த தங்கவேல், திண்டுக்கல் மாவட்டத்தில் 2005ம் ஆண்டுஇறந்த மெளனஜோதி, 2004ம் ஆண்டு இறந்த பழனியம்மாள், நாராயணசாமி ஆகியோரும் தற்போது சிக்குன்குனியாவால் இறந்து இருப்பதாக ஜெயலலிதா பட்டியல் போட்டிருக்கிறார்.
மேலும் 2006 ஆண்டு விஷம் அருத்தி தற்கொலை செய்து கொண்டவர்கள், தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள், விபத்தில் இறந்தவர்கள் அனைவரையும் சிக்குன் குனியாவால்இறந்து இருப்பதாக தனது பட்டியலில் சேர்த்து இருக்கிறார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி, தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி சிக்குன் குனியா நோயைகட்டுபடுத்தி இருக்கிறது. இந் நோயால் யாரும் இறந்து போக வாய்ப்பில்லை என நேற்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு மாறாக ஜெயலலிதா எப்படிப்பட்ட பொய்யை அறிக்கையாக்கியிருக்கிறார் என்பதை தமிழ்நாட்டு மக்கள்ஆதாரப்பூர்வமாக புரிந்து கொள்வது நல்லது. சிக்குன் குனியா நோயால் இறந்தவர் வீட்டுக்கு நேரில் சென்றுஆறுதல் கூற முடியும்? ஜெயலலிதாவின் அறிக்கையை நம்பி. உயிரோடு இருப்பவர்களின் வீட்டுக்கு சென்றுஆறுதல் கூறி அவமானபட முடியுமா?
கடந்த ஆட்சியில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டினிகாரணமாக சாகிறோம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்தார்கள். அவர்களில் எத்தனை பேர் வீட்டுக்குஜெயலலிதா சென்றார்?
விவசாயிகள் எழுதி வைத்து விட்டுச் சென்ற கடிதத்தை தேடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்சிவபுண்ணியம் இல்லத்துக்கு நள்ளிரவில் காவல் துறையினரை அனுப்பி மிரட்டியதை மக்கள் மறந்துவிட்டார்களா என்ன? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications