புதுச்சேரியில் பந்த்: பஸ்கள் இயங்கவில்லை
புதுச்சேரி:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு ஒப்பதல் அளித்ததைஎதிர்த்தது இன்று அம் மாநிலத்தில் பந்த் நடக்கிறது.
ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அங்கீகாரம் அளிக்கப்பட்டதை எதிர்த்து கடந்த 18 நாட்களாக அந்தமருத்துவமனையின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தப் போராட்டத்திற்கு அதிமுக, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, புதிய நீதிக்கட்சி, இந்தியகுடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த கட்சிகளின் சார்பில் ஜிப்மர் தன்னாட்சி எதிர்ப்பு மக்கள் போராட்ட குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுஅதன் மூலம் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்புஆகியவையும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த பந்த் போராட்டம் தேவையற்றது என்றும் பந்தை முறியடிப்போம்என்றும் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், திமுக, பாமக போன்ற கட்சிகள் அறிவித்து இருக்கிறது.
இந் நிலையில் இன்று காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது. காலை முதலே புதுச்சேரி வெறிச்சோடிகாணப்படுகிறது.
பஸ்கள், ஆட்டோக்கள், டெம்போக்கள், லாரிகள் இயங்கவில்லை. பஸ் நிலையங்கள் வெறிச்சோடிகாணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் இருந்து வரும் பஸ்கள் புதுவை மாநில எல்லையில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன.
பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.பள்ளிகள் திறந்திருந்தாலும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் வரவில்லை.
அரசு அலுவலகங்களிலும் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் வந்தனர். பந்தையொட்டிபோலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications