மீண்டும் பேச்சுவார்த்தைக்கு புலிகள் தயார்
கொழும்பு:
இலங்கை அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒப்புக்கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.
நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்க்கர் கிளிநொச்சி சென்று புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்தமிழ்செல்வனுடன் ஆலோசனை நடத்தினார்.இத் தகவலை அமைச்சரும் ராணுவ செய்தித் தொடர்பாளருமான கெகிலிய ரம்புகவெல்லா கொழும்பில் இன்றுநிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,
இதற்கு மேலும் விளையாடிக் கொண்டிருக்க நாங்கள் தயாராக இல்லை. மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கபுலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இருந்து உறுதியான பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். கடந்த வாரம்இது தொடர்பாக அரசாங்கத்தின் தகவலோடு கிளிநொச்சி சென்றார் நார்வே தூதர்.
பேச்சுவார்த்தைக்கு புலிகளின் ஒப்புதலை அவர் பெற்றுவிட்டதாகத் தெரிகிறது. புலிகளிடம் இருந்து சிலதகவல்களோடு அவர் திரும்பி வந்துள்ளார். அவை குறித்து அதிபர் பரிசீலித்து இரண்டொரு நாளில்முடிவெடுப்பார்.
எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி எதையும் புலிகள் தரப்பு தராவிட்டாலும் வேறு வழியில் அந்த ஒப்புதலைதந்துள்ளார் பிரபாகரன்.
நிபந்தனையின்றி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ள இரு தரப்பினரின் முடிவையும் அமெரிக்கா,ஜப்பான், ஐரோப்பிய யூனியன், நார்வே ஆகிய நாடுகள் வரவேற்றுள்ளன.
இலங்கைக்கு இந்தியா யோசனை:
இலங்கையில் முழு அதிகாரப் பகிர்வுடன் கூடிய புதிய சமாதானத் திட்டத்தை உருவாக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறினார்.
முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரியான அய்யர், பண்டாரநாயகேவின் மறைவு தினத்தையொட்டிகொழும்பில் நடந்த தெற்காசியாவில் இப்போதையே சூழல் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசினார்.அவர் கூறுகையில்,
இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை காப்பாற்றியாக வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். இதைஉணர்நது தான் முழு அதிகாரப் பகிர்வுடன் கூடிய திட்டத்தை உருவாக்கி இலங்கை அரசும் புலிகளும்பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று இந்தியா யோசனை தெரிவித்துள்ளது.
அதிகாரப் பகிர்வு மூலம் தான் சமூக ஒற்றுமையை உருவாக்க முடியும். சிறுபான்மையோரின் நம்பிக்கையை பெறமுடியும். இலங்கை அனைத்துப் பிரிவினரின் ஆதரவையும் பெற முடியும்.
அதிகாரப் பகிர்வு விஷயத்தில் தனது அனுபவத்தையும் திறமையையும் இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளஇந்தியா தயாராகவே உள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications