ஜெ. தூண்டுதலால் கொலை மிரட்டல்-சண்முகம்
மதுரை:
என்னை கட்சியை விட்டு நீக்கினால் கட்சி பெரும் பிளவை சந்திக்கும். இதனால் தான்என்னை நீக்க பயப்படுகிறார் ஜெயலலிதா என சமீபத்தில் அதிமுகவில் இருந்து திமுகதரப்புக்கு தாவிய மதுரை எம்எல்ஏ சண்முகம கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:என்னை ஜெயலலிதா நன்றி இல்லாதவன் என்று கூறுகிறார். திராவிட இயக்கங்கள்ஒன்றுபட வேண்டும் என்று நான் சொன்னது எப்படி நன்றி மறந்த செயலாகும்?
ஜெயலலிதாவிடம் மென்மையான போக்கை கடைப் பிடியுங்கள் என்று அமைச்சர்ஸ்டாலினிடம் நான் கூறியது கட்சி விரோதமான செயலா?
முதல்வர் கருணாநிதி அழகு தமிழில் பேசுபவர் என்று அவரை ஒரு பத்திரிகையில்ஜெயலலிதா பாராட்டவில்லையா?
ஆனால், நான் எனது தொகுதியில் பல திட்டங்களை செயல்படுத்த உதவியஸ்டாலினை பாராட்டியது மட்டும் நன்றி கெட்ட செயலா?
ஜெயலலிதா நன்றி உள்ளவரா என்பதை கருப்பசாமி பாண்டியன், சாத்தூர்ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கண்ணப்பன் போன்றவர்களைக் கேட்டால் தெரியும்.நன்றி என்ற வார்த்தையை பயன்படுத்தவாவது ஜெயலலிதாவுக்கு தகுதியிருக்கிறதா?
என்னை ஜெ பேரவையில் இருந்து நீக்கிவிட்டு இது "டிரைலர்தான் என ஜெயலலிதாகூறியுள்ளார். "டிரைலர் என்றால் கதைச் சுருக்கம். அப்படியானால் என் கதையைமுடித்துவிட நினைக்கிறாரா?
அவர், "டிரைலர் என்று கூறிய பின்னர் தான் எனக்கு கொலை மிரட்டல் வந்தது.எனவே, அதிமுக தலைமையின் தூண்டுதல்படி என்னை கொல்ல முயற்சி நடக்கிறது.
இதனால் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் புகார் தர இருக்கிறேன்.மேலும் முதலமைச்சர், சபாநாயகரிடமும் புகார் செய்வேன்.
நான் திமுகவில் சேர திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
எனக்கு அதிமுகவில் இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. எனவே, திமுகவுக்குபோகமாட்டேன். அதிமுகவில் இருந்து விரைவில் பல எம்எல்ஏக்கள் விலகப்போகின்றனர்.
அதிமுகவில் உழைத்தவனுக்கு மரியாதை இல்லை. தமிழே தெரியாத பதர் சயீத்துக்குஎன் தோழி என்று சொல்லி பதவி தந்துள்ளார் ஜெயலலிதா.
தினகரன், தங்கத்தமிழ்ச் செல்வன், பன்னீர்செல்வம், ஜெயலலிதா என தேனிமாவட்டத்திற்குள்ளேயே கட்சி முடங்கிவிட்டது. கட்சியின் செயற்குழுவுக்குக் கூடஎம்எல் ஏக்களை கூப்பிடாத ஒரே கட்சி அதிமுக தான்.
இப்படித்தான் கட்சி நடத்துவார்களா? உள்ளாட்சித் தேர்தலில் எனது தொகுதியில் 20வார்டுகளில் தேர்தல் நடக்கிறது. அதில் நாகரிகமான அரசியல்வாதிகளைதேர்ந்தெடுக்க பிரசாரம் செய்வேன்.
அதிமுக தூய்மை பெறும்வரை போராடுவேன். என்னை கட்சியை விட்டு நீக்கினால்கட்சி பெரும் பிளவை சந்திக்கும். இதனால் தான் என்னை நீக்க பயப்படுகிறார்ஜெயலலிதா.
ஜெயலலிதாவுக்கு பாடம் கற்பிக்காமல் விட மாட்டேன் என்றார் சண்முகம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications