திருப்பதியில் பிரம்மோற்சவம் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா, கொட்டும் மழையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று கொடியேற்றத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இந்நிலையில் திடீரென்று பலத்த மழைபொய்தது. 5.47க்கு கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் சுந்தரவரத பட்டாசட்சாரியார் பிரம்மோற்சவ விழாகொடியை ஏற்றினார்.ஆந்திர அரசின் சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் வழங்குவதற்காக முதல்வர் ராஜசேகர ரெட்டிஏழுமலையான் கோவிலுக்கு எதிரேயுள்ள பேடி ஆஞ்சநேயர் சன்னதியிலிருந்து, பட்டு வஸ்திரத்தை தலையில்சுமந்து, கொலு மண்டபம் வழியாக கோயில் சென்று ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கினார்.
அதன் பிறகு அந்த பட்டுவஸ்திரம் பெருமாளுக்கு அணியப்பட்டது. இரவு 9 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமலையப்ப சுமாமி, சின்ன சேஷ வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
பிரம்மேற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
10 நாட்களுக்கு விழா நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications