அதிமுக கூட்டணி டமார்-திமுகவில் திருமாவளவன்
சென்னை:
அதிமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகிவிட்டது. திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தசிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இணைந்தார்.
![]() |
உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பாக அதிமுகவுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திருமாவளவன்விலகியுள்ளார்.
முதலில் திமுக கூட்டணியில் இருந்த திருமாவளவன், 2001 தேர்தலில் வென்று எம்எல்ஏவானார். ஆனால்,பின்னர் திமுக கூட்டணியை விட்டு விலகியபோது தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இந் நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விடுதலை சிறுத்தைகளை அதிமுக பக்கம் இழுத்தார்ஜெயலலிதா. அந்தக் கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் இரு இடங்களில் வென்றது. அதிமுககூட்டணியில் இருந்தாலும் சட்டமன்றத்தில் திமுகவுக்கு சாதகமான நிலையையே இந்த இரு எம்எல்ஏக்களும்எடுத்து வந்தனர்.
இதனால் அதிமுக-திருமாவளவன் இடையே உரசல் ஏற்பட்டது. இந் நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுககூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 4 சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. அத்தோடு தேர்தல்உடன்பாடும் ஏற்பட்டுவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை என திருமாவளவன் கூறி வந்தார்.
இந் நிலையில் திடீரென நேற்றிரவு தனது கட்சியின் நிர்வாகிகள் எம்எல்ஏக்களுடன் கருணாநிதியை சந்தித்ததிருமாவளவன், திமுக கூட்டணியில் இணைந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை சந்தித்த அவர் அவருக்கு பொன்னாடை போர்த்திவிட்டு 30நிமிடங்கள் பேசினார். இதையடுத்து அவரை கூட்டணியில் மகிழ்ச்சியோடு இணைத்துக் கொள்வதாக கருணாநிதிதெரிவித்தார்.இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,
இனம் இனத்தோடு சேர்ந்திருக்கிறது. திருமாவளன் வர வேண்டிய இடத்துக்குத் தான் வந்திருக்கிறார். அவர்முன்பே வந்திருக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளுக்கான இடங்கள் இரண்டு நாளில் முடிவாகிவிடும். திமுகவுக்குஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து அவர்களுக்கு பகிர்ந்தளிப்போம். நிச்சயமாக இரண்டு நகராட்சித் தலைவர்பதவிகளுக்குப் போட்டியிட சிறுத்தைகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications