சிறுவன் கொலை-ஹோமோ வாலிபருக்கு தூக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர்:
சிறுவனுடன் தகாத உறவு கொண்டிருந்ததைப் பார்த்து விட்ட அவனது தம்பியை வெறித்தனமாக கொலை செய்தவாலிபருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வாகைக்குளம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரகுப்தன்.இவருக்கு பழனிக்குமார் (வயது 9), சிவா (4) என இரு மகன்கள்.சித்திரகுப்தனின் வீட்டுக்கு அருகே வசித்து வருபவர் செந்தில். இவர் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்.ஓரினச் சேர்ககை பழக்கம் செந்திலுக்கு இருந்தது. பழனிக்குமாரை தனது வலையில் வீழ்த்தி அவனிடம்வெறித்தனமாக இன்பம் அனுபவித்து வந்தார் செந்தில்.
கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி பழனிக்குமாரையும், தம்பி சிவாவையும் ஏமாற்றி அங்குள்ளகண்மாய்க்கு அழைத்துச் சென்ற செந்தில், சிவாவை ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு பழனிக்குமாரிடம்ஓரினச் சேர்க்கையை ஆரம்பித்தார்.
இதைப் பார்த்து பயந்து போன சிவா, தனது அண்ணனை விட்டு விடுமாறு கூறி அழுதுள்ளான். இதைப் பார்த்துகோபமடைந்த செந்தில், சிவாவை அடித்துள்ளார். பின்னர் சிவாவின் வாயைப் பொத்தி கழுத்தை நெரித்துக்கொலை செய்தார். அதன் பின்னரும் வெறி தணியாத செந்தில், சிவாவின் பிணத்தை தண்ணீரில் வீசி எறிந்தார்.
பிறகு பழனிக்குமாரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்னைக்குத் தப்பி ஓடினார். அங்கு ஒரு இடத்தில்பழனிக்குமாரை அடைத்து வைத்து சித்திரவதை செய்து இன்பம் அனுபவித்துள்ளார்.
பின்னர் பல்வேறு ஊர்களுக்கு பழனிக்குமாருடன் சென்ற செந்தில், தொடர்ந்து தனது சித்திரவதையை நடத்திவந்துள்ளார். இந்த நிலையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செந்திலையும், பழனிக்குமாரையும் தேடிவந்தனர். கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி செந்திலை போலீஸார் கைது செய்தனர்.
அவர் மீது விருதுநகர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிராமலிங்கம், நேற்று செந்திலுக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
தனது தீர்ப்பில் நீதிபதி ராமலிங்கம் கூறுகையில், இயற்கைக்கு மாறாக செந்தில் நடந்து கொண்டுள்ளார். மனிதத்தன்மையுள்ள யாருமே செய்யத் தயங்கும் செயலை மிகக் கேவலமாகவும், கொடூரமாகவும் செய்துள்ளார்.
அவரது செயல் மிகப் பெரிய தெய்வக் குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதி, பல்வேறுபிரிவுகளின் கீழ் மொத்தம் 26 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அதிகபட்சமாக தூக்குத் தண்டனையும்விதித்துத் தீர்ப்பளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications