உள்ளாட்சிகளில் திமுகவின் சாதனைகள்-கருணாநிதி
சென்னை:
மக்களாட்சியில் அரசின் நிர்வாகத்தை ஆலமரத்திற்கு ஒப்பிட்டால் அதன்வேர்களாகவும், விழுதுகளாகவும் விளங்குபவை உள்ளாட்சி அமைப்புகள் தான் எனமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மக்களாட்சியில் அரசின் நிர்வாகத்தை மனிதனோடு ஒப்பிட்டால் அந்த அமைப்புகள்நாடி நரம்புகளாகவும், உயிர்த் துடிப்புகளாகவும் விளங்குகின்றன.
இத்தனை முக்கியத்துவத்துவம் வாய்ந்த இந்த அமைப்புகள் இடையில் 10 ஆண்டுகாலம் செயல்பட முடியாமலே கட்டுண்டு கிடந்ததையும், 1996ல் நான்காவதுமுறையாக மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தலைஅறிவித்து மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் அனைத்திலும் 1,16,747 மக்கள்பிரதிநிதிகள் நிர்வாகப் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகளைப்பெற்றனர்.
அதில் மகளிருக்கு 33 சதவீதம் ஒதுக்கி பெரும் சாதனை புரிந்ததன் காரணமாக 44,143பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பதவியேற்கும் நிலையை திமுக உருவாக்கியது.
உள்ளாட்சி அமைப்புகளில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிதி வரம்பைப்பொறுத்தவரை,
சென்னை மாநகராட்சிக்கு ரூ. 7.5 லட்சம் என்று இருந்ததை ரூ. 50 லட்சமாகஉயர்த்தினோம். மற்ற மாநகராட்சிகளுக்கு ரூ. 2 லட்சம் என்றிருந்ததை ரூ. 25லட்சமாகவும்,
நகராட்சிகளுக்கு ரூ. 10,000 ஆக இருந்ததை ரூ. 10 லட்சமாகவும் உயர்த்தியது திமுகஅரசு தான்.
வரி வருவாயில் 8 சதவீத நிதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.இதனால் திமுக ஆட்சியில் ரூ. 1,036 கோடி உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்டது.
விளம்பர வரி, கேபிள் கட்டணம் போன்றவற்றை ஊராட்சிகளே வசூலித்துக் கொள்ளஅதிகாரம் வழங்கப்பட்டது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரம்பெருக்கப்பட்டது.
இந்த நிதியைக் கொண்டு தொகுப்பு வீடுகள், கான்கிரீட் கூரை போட நிதியுதவி,பள்ளி, ரேஷன் கடை கட்டடங்கள், தெரு விளக்குகள், சமத்துவபுரம், சிமென்ட்சாலைகள், தார் சாலைகள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட திட்டங்கள்நிறைவேற்றப்பட்டன.
மக்களாட்சியில் அரசின் நிர்வாகத்தை ஆலமரத்திற்கு ஒப்பிட்டால் அதன்வேர்களாகவும், விழுதுகளாகவும் விளங்குபவை உள்ளாட்சி அமைப்புகள் தான் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications