கீரிப்பட்டி: தலைவர் போட்டியின்றி தேர்வு
மதுரை:
சர்ச்சைக்குரிய மதுரை மாவட்டம் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பால்சாமி என்பவர்போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்டக்காச்சியேந்தல்ஆகிய பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் பல காலமாக காலியாகவே உள்ளன.இந்தப் பஞ்சாயத்துக்களில் முக்குலத்தோர் வகுப்பினர் அதிகம் இருந்தாலும் கூட தலைவர் பதவி தலித்சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்டதால் தங்களுக்கு தலித் ஒருவர் தலைவராக விரும்பாத முக்குலத்தோர்வகுப்பினர் இப்பஞ்சாயத்துக்களுக்கு தலைவர் வருவதை அனுமதிக்க மறுக்கின்றனர்.
இங்கு தேர்தல் நடந்து தலைவராக யாராவது வந்தாலும் கூட வெற்றி பெற்ற அடுத்த நாளே பதவியை ராஜினாமாசெய்து விடுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தப்பஞ்சாயத்துக்களில் பலர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் பாப்பாபட்டியில் 4 பேரும், நாட்டாமங்கலத்தில் 7 பேரும் போட்டியில் உள்ளனர். கீரிப்பட்டியில் 3 பேர்வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 2 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யுப்பட்டன. பால்சாமிஎன்பவரது மனு மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து பால்சாமி இங்கு போட்டியின்றித் தேர்வாகியுள்ளார். இவரது தேர்வு வாக்கு எண்ணிக்கை நாளன்றுஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஊர் மக்களால் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் பால்சாமி என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications