பிரபாகரனுக்கு ஸ்ரீ ரவிசங்கர் சால்வை!
டெல்லி:
ஆன்மீக தலைவர் ஸ்ரீ ரவிசங்கர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு வெள்ளை சால்வையை பரிசாகஅளித்துள்ளார் என்று ரவிசங்கரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஆர்ட் ஆல் லிவிங் அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர். ஆன்மீகதலைவரான ரவிசங்கர், இலங்கை இனப் பிரச்சினையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், இலங்கைஅரசுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாக அவ்வப்போது கூறி வருகிறார்.இந்த நிலையில் ரவிசங்கர் திடீர் பயணமாக இலங்கை சென்றார். தலைநகர் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்குஹெலிகாப்டர் மூலம் சென்ற ரவிசங்கர் அங்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைசந்தித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், ரவிசங்கர்கிளிநொச்சிக்குச் சென்றார். அங்கு பிரபாகரனுக்கு வெள்ளை சால்வையை அவர் பரிசாக அளித்தார். தான் மிகவும்விரும்பும், மதிக்கும் வெகு சிலருக்கு மட்டுமே இவ்வாறு வெள்ளை சால்வையை பரிசாக அளிப்பது ரவிசங்கரின்வழக்கம்.
சால்வையை அவர் நேரடியாக பிரபாகரனிடம் கொடுத்தாரா அல்லது வேறு யாராவது பிரதிநிதி மூலம்பிரபாகரனுக்கு அவர் சால்வையைக் கொடுத்தாரா என்பது குறித்து விரிவாக கூற முடியாது. காரணம் இது மிகமுக்கியமான விஷயம். உணர்ச்சிப்பூர்வமான விஷயம் என்றார் அந்த செய்தித் தொடர்பாளர்.
ரவிசங்கர் பிரபாகரனை சந்தித்துப் பேசினாரா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அமைதிப்பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பிரபாகரன் அறிவித்துள்ள நிலையில் ரவிசங்கரின் கிளிநொச்சி பயணம்முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கிளிநொச்சி பயணத்திற்குப் பின்னர் ரவிசங்கர் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆன்மீகதலைவர்களால் மட்டுமே மன மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அமைதி திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில்மட்டுமே நான் கிளிநொச்சிக்குப் பயணம் மேற்கொண்டேன்.
நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்பதும் எனது பயணத்தின் இன்னொரு நோக்கம். இப்பிரச்சினையில்இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பங்கையும் நான் அங்கு நான் விவாதித்தேன் என்றார் ரவிசங்கர்.
நார்வே தூதர் வருகை:
இதற்கிடையே அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மீண்டும் தொடங்கவுள்ள பேச்சுவார்த்தைக்கானபூர்வாங்க ஏற்பாடுகளை செய்வதற்காக நார்வே நாட்டின் சிறப்புத் தூதர் ஜான் ஹேன்சன்பேயர் ஞாயிற்றுக்கிழமைகொழும்பு வருகிறார்.
இனப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரபாகரன் அறிவிப்பு வெளியிட்டதைத்தொடர்ந்து நார்வே தூதர் கொழும்பு வருகிறார். கொழும்பு வரும் அவர் முதலில் அரசுப் பிரதிநிதிகளைசந்திக்கிறார். அதன் பின்னர் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.
பேச்சுவார்ததையை எப்போது வைத்துக் கொள்வது, எங்கு பேசுவது, எப்போது பேசுவது என்பது உள்ளிட்டவைகுறித்து இரு தரப்புடனும் நார்வே தூதர் ஹேன்சன்பேயர் விவாதிக்கவுள்ளார்.
இதேபோல நார்வே அமைச்சரும், முன்னாள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நார்வே தூதருமான எரீக்சோல்ஹீமும் இலங்கை வருகிறார். அவர் பிரபாகரனை சந்தித்துப் பேச வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications