சிவகாசி: பட்டாசு விபத்தில் 3 பேர் பலி!

Subscribe to Oneindia Tamil

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்டபயங்கர விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி பலியானார்கள். 8 பெண்கள்உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகாசி அருகே சாத்தூர் செல்லும் சாலையில் ஜெயராஜ் என்பவருக்குச் சொந்தமானபட்டாசுத் தயாரிப்புத் தொழிற்சாலை உள்ளது. இங்கு தீபாவளியையொட்டி பட்டாசுத்தயாரிக்கும் பணி படு மும்முரமாக நடந்து வருகிறது.

மொத்தம் 40 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. 200க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர். நவீன பட்டாசுகள் தயாரிக்கும் அறைகளில்இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் 15 அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் சிதறி ஓடினர். இந்த விபத்தில்சிக்கி மாரீஸ்வரி, செல்வி, பாக்யநாதன் ஆகிய 3 தொழிலாளர்கள் பரிதாபமாகஉயிரிழந்தனர்.

8 பெண்கள் உள்பட 13 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+