திமுகவினர் மிரட்டுகிறார்கள்: விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேமுதிக வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று திமுகவினர்மிரட்டுவதாக விஜய்காந்த் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது,

முரசு சின்னம் சம்பந்தமாக டெல்லியில் தேர்தல் அதிகாரியை சந்தித்து பேசினோம்.தேமுதிக கடந்த சட்டசபை தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 8.33% வாக்குகள்பெற்றுள்ளது என்பதை எடுத்துக்கூறி எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்என்று கோரிக்கை வைத்தோம்.

தேர்தல் கமிஷன் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்க 2 விதமான அளவுகோல்களைவைத்துள்ளது. அதாவது பதிவான மொத்த வாக்குகளில் 6% வாக்குகளையும், 2எம்எல்ஏக்களையும் பெற்றிருக்க வேண்டும் என்பது ஒரு அளவுகோல், மற்றொன்று234 தொகுதிகளில் 7 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றிக்க வேண்டும்.

எங்கள் கட்சியை பொறுத்தமட்டில் மொத்தம் 28 லட்சம் வாக்குகளைபெற்றிருக்கிறோம். ஒரு எம்எல்ஏ வெற்றி பெறுவதற்கு 50 ஆயிரம் ஓட்டுகள்இருந்தாலே போதும். நாங்கள் பெற்றிருக்கும் ஓட்டுக்கள் 14 எம்எல்ஏக்களுக்கு சமம்எனவே எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்.

பதிவான வாக்குகளில் 4% வாக்குகள் பெற்றாலே அந்த கட்சிக்கு அங்கீகாரம்வழங்கலாம் என்று 1968ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டுவரை ஒரு விதி இருந்தது.இந்த விதி இப்போது இல்லை. அந்த விதியை இப்போது கொண்டு வாருங்கள் என்றுதேர்தல் கமிஷனிடம் எடுத்துக் கூறினோம். இதுகுறித்து தேர்தல் கமிஷன் நல்ல முடிவுஅறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

எங்களதுக்கு உள்ளாட்சி தேர்தலில் முரசு சின்னம் கிடைக்கவிடாமல் சதி செய்துவிட்டனர். இதானால் நாங்கள் மாற்று சின்னமாக தீபம் சின்னத்தில் போட்டிகிறோம்.

இதற்கிடையில் நாங்கள் தீபம் சின்னத்தில் போட்டியிடுவது தெரிந்தும் விடுதலைசிறுத்தைகள் தீபம் சின்னதில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும்முரசு சின்னத்தை முடக்க வழக்கு போட்டுள்ளனர். அதையும் நாங்கள் சந்திக்க தயாராகஇருக்கிறோம்.

முரசு சின்னம் கிடைக்கவிடாமல் முதல்வர் கருணாநிதி சதி செய்கிறார்.தொல்.திருமாவளவன் திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார். நாங்கள் எந்த கட்சியுடனும்கூட்டணி சேரமாட்டோம். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்.

எங்கள் கட்சியினர் வேட்பு மனுதாக்கல் செய்த ஒரு சில இடங்களில் குழப்பம்உள்ளது. இந்த குழப்பத்தை சரி செய்து விடுவோம். தமிழ்நாடு முழுவதும் குறிப்பாககிராம பகுதிகளில் எங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிடக்கூடாதுஎந்று திமுகவின் மிரட்டுகிறார்கள்.

இந்த மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். எங்கள் கட்சிக்கு என்றுதனிப்பட்ட செல்வாக்கு உண்டு. கடந்த சட்டசபை தேர்தில் பெற்ற வாக்குகளை விடஉள்ளாட்சி தேர்தலில் கூடுதலாக ஓட்டு வாங்குவோம்.

மதுரை மத்திய தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று இப்போதேசொல்ல முடியாது. எல்லா கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தான்போட்டியிடுகிறார்கள். அதுபோல தான் நாங்களும் போட்டியிடுகிறோம்.

திமுக அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு போய் சேர்ந்துள்ளதா என்பதைபார்த்த பின்பு தான் அவர்களுக்கு நன்றி சொல்ல முடியும். தேமுதிக ஒரு கட்சியேஇல்லை என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசி இருக்கிறார். நாங்கள் ஒருகட்சியே இல்லை என்றால் எங்களை ஏன் தாக்கிப் பேச வேண்டும் என்றார்விஜய்காந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+