கண்டபடி பேசக் கூடாது: தேர்தல் ஆணையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது மற்ற கட்சி வேட்பாளர்களின் தனிப்பட்டவாழ்க்கை குறித்து விமர்சிக்கக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம்உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை சிறப்பான முறையில் நடத்தி முடிக்கும் வகையில்ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாகத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.சென்னை, மதுரை ஆகிய பெரு நகரங்களில் இரண்டு தேர்தல் பார்வையாளர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற 28 மாவட்டங்களுக்குத் தலா ஒருவர் தேர்தல்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் பார்வையாளர்களுடைய இருப்பிடம், தொலைபேசி எண், பயணத் திட்டம்பற்றி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பொது மக்களுக்கு விளம்பரப்படுத்தவேண்டும்.

பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் ஆகியோர் தேர்தல்பார்வையாளர்களிடம் எந்த நேரத்திலும் தங்களுடைய குறைகளைச் சொல்லலாம்.

தேர்தல் வன்முறையில் ஈடுபடுவோர், வாக்காளர்களை அச்சுறுத்துபவர்கள், தேர்தல்பணிகளை செய்ய விடாமல் தடுப்பவர்கள், கலகம் செய்பவர்கள் ஆகியோர் மீதுமபொது வாழ்க்கைக்கு பங்கம் விளைவிப்போர் மீதும் கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும்.

தேர்தல் பாரபட்சமில்லாமல் நடைபெறவும், வாக்காளர்கள் அமைதியான முறையில்ஓட்டு போடவும், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

அனைத்து வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் தேர்தல் விதிமுறைகள்முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இந்த விதிமுறைகள் அக்டோபர் 28ம் தேதிவரை அமலில் இருக்கும்.

எந்த அரசியல் கட்சியோ, வேட்பாளர்களோ பல்வேறு ஜாதி, மத, இன,மொழியினரிடையே வேற்றுமையையோ, மனக்கசப்பையோ, கொந்தளிப்பையோஏற்படுத்தி ஓட்டு வாங்கும் வேலையில் ஈடுபடக் கூடாது.

வழிபாட்டுத் தலங்களைத் தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது.

மற்ற கட்சி வேட்பாளர்களைப் பற்றி விமர்சிக்கும் போது அவர்களது தனிப்பட்டவாழ்க்கை குறித்து விமர்சிக்கக் கூடாது.

தனிநபர் வீடுகள் முன்பு கிளர்ச்சிகள் மற்றும் மறியல்களில் ஈடுபடக் கூடாது.

ஒரு கட்சியின் கூட்டம் நடைபெறும் இடத்தின் வழியாக மற்றொரு கட்சி ஊர்வலம்நடத்தக் கூடாது.

வாகனத்தில் பொருத்தப்பட்ட ஒலிப்பெருக்கி உட்பட எல்லா ஒலிப் பெருக்கிகளையும்தேர்தல் பிரசாரத்திற்காக காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமேபயன்படுத்தலாம்.

காவல்துறையின் அனுமதி பெறாமல் எந்தக் கட்சியோ, வேட்பாளரோஒலிப்பெருக்கியை பயன்படுத்தக் கூடாது.

ஒரு அரசியல் கட்சியின் கொடியையோ அல்லது அக்கட்சி ஒட்டுகிறசுவரொட்டியையோ மற்றொரு கட்சியின் வேட்பாளர் அல்லது அவரது தொண்டர்கள்அகற்றவோ, கிழிக்கவோ கூடாது.

தனி நபருடைய நிலம், கட்டடம், மதில் சுவர் ஆகியவற்றில் அவர்களின்அனுமதியின்றி கொடிக் கம்பங்கள், கட்-அவுட்கள், சுவரொட்டிகள், தட்டிகளைஒட்டவோ, வைக்கவோ கூடாது.

இவ்வாறு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+