மதுரை: உள்ளாட்சி பிரசாரத்துக்கு கட்டுப்பாடு
சென்னை:
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அக்டோபர் 9ம் தேதிமாலை 5 மணி முதல் 11ம் தேதி மாலை 5 மணி வரை பிரசாரம்செய்ய முடியாது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிநரேஷ்குப்தா தெளிவுபடுத்தியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில், அக்டோபர் 11ம் தேதி இடைத் தேர்தல்நடைபெறவுள்ளது. இத் தேர்தலுக்கான பிரசாரம் 9ம் தேதி மாலை 5மணியுடன் ஓய்கிறது. ஆனால் இங்கே ஒரு சிக்கல் எழுந்துள்ளது.மதுரை மாநகராட்சிக்கு அக்டோபர் 15ம் தேதி தான் தேர்தல்நடைபெறவுள்ளது. எனவே மத்திய தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்9ம் தேதி மாலைக்குப் பிறகு 11ம் தேதி மாலை வரை உள்ளாட்சித்தேர்தலுக்கான பிரசாரத்தை செய்ய முடியுமா என்ற குழப்பம்அரசியல் கட்சியினர் மத்தியில் நிலவியது.
இதற்கு தற்போது மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ளஅறிக்கையில், மதுரை மத்திய தொகுதியில், 9ம் தேதி மாலை 5மணியுடன் பிரசாரம் முடிகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி,தேர்தல் பிரசாரம் முடிந்த ஒரு இடத்தில், அங்கு வாக்குப் பதிவுநடந்து முடியும் வரை எந்தவிதமான பிரசாரத்தையும் மேற்கொள்ளமுடியாது.
இது உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்கும் பொருந்தும். எனவேமதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 9ம் தேதி மாலைமுதல் 11ம் தேதி மாலை வரை உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தைமேற்கொள்ள முடியாது.இதை மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனநரேஷ்குப்தா எச்சரித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications