2 சென்ட் நிலம் ஃப்ரீ: கலக்கும் பிரசாரம்!
மதுரை:
மதுரை அருகே உள்ள புரசப்பட்டி கிராமப் பஞ்சாயத்து தேர்தல்பிரசாரத்தில், திமுக ஸ்டைலில், பல இலவச வாக்குறுதிகளைவழங்கி இரு வேட்பாளர்கள் செய்து வரும் பிரசாரம் அந்தபஞ்சாயத்து வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மதுரை அழகர்கோவில் அருகே உள்ளது புரசப்பட்டி பஞ்சாயத்து.இந்த பஞ்சாயத்தின் கீழ் தேக்காம்பட்டி, கீழ்ப்பட்டணம்,செட்டிக்குளம், நவக்குளம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.இங்கு தற்போது தலைவராக உள்ள ஈஸ்வரியே மீண்டும்போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அம்மாசி என்பவர்போட்டியிடுகிறார். இவர் முன்பு தலைவராக இருந்தவர்.
இருவரும் சரமாரியாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குகளைசேகரித்து வருகின்றனர். ஈஸ்வரியின் வாக்குறுதிகள்தான் மக்களைஅதிகம் கவர்ந்துள்ளன. என்னை ஓட்டுப் போட்டு தலைவர்பதவிக்கு தேர்வு செய்தால், ஏழைக் குடும்பத்துக்கு 2 சென்ட் நிலம்இலவசமாக தருவேன் என்று அதிரடியாக பிரசாரம் செய்துவருகிறார் ஈஸ்வரி.
இது எப்படி சாத்தியம் என்று ஈஸ்வரியிடம் கேட்டால்,செட்டிக்குளம் மற்றும் நவக்குளம் ஆகிய கிராமங்களில் அரசுக்குச்சொந்தமான ஒன்பதரை ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இதைஅரசுடன் பேசி, ஏழைகளுக்கு இரண்டு சென்ட் நிலமாகப் பிரிக்கநடவடிக்கை எடுப்பேன் என்று விளக்குகிறார் ஈஸ்வரி.
ஈஸ்வரியின் இந்த திமுக ஸ்டைல் இலவச வாக்குறுதி, கிராமமக்களை நன்றாகவே கவர் செய்துள்ளதை உணர முடிகிறது.இவர் இப்படி என்றால் எதிர்த்துப் போட்டியிடும் அம்மாசிஅதிரடியாக பிரசாரம் செய்கிறார். எனக்கு வாக்களித்தால்,புரசப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ளகோவில்களை ரூ. 20,000 செலவில் புதுப்பித்து, சீரமைத்துதருவேன் என்கிறார் அம்மாசி.
இருவரும் செய்து வரும் பிரசாரத்தைப் பார்க்க கூட்டம் கூடுகிறதோஇல்லையோ, அவர்கள் அள்ளி விடும் வாக்குறுதிகளை கேட்டுரசிக்க பெரும் கூட்டம் கூடத்தான் செய்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications