மதுரை இடை தேர்தல்-அனல் பறக்கும் பிரச்சாரம்
மதுரை:
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
மதுரை மத்திய தொகுதிக்கு வரும் 11ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இதில்திமுக சார்பில் கெளஸ் பாட்சா, அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா, தேமுதிக சார்பில்பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.3 வேட்பாளர்களும் படு தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுகவேட்பாளர் கெளஸ் பாட்சா, தொகுதிக்குட்பட்டவர் என்பதால் நம்பிக்கையுடன்அத்தனை பகுதிகளிலும் புகுந்து புகுந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான காஜிமார் தெரு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கெளஸ் பாட்சாவுக்கு உற்சாகவரவேற்பு கிடைக்கிறது.
கவுன்சிலராக இருந்து தொகுதி மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளதால், பாட்சாவெற்றி நிச்சயம் என திமுகவினர் அடித்துக் கூறுகிறார்கள். திமுக ஆட்சியின் 100 நாள்சாதனைகளை சொல்லி அக்கட்சியினர் ஓட்டு கேட்கிறார்கள்.
திமுகவுக்கு சற்றும் சளைக்காமல் அதிமுகவும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இலவசகலர் டிவி திட்டம், இலவச நிலம் உள்ளிட்ட திமுக அரசின் பல்வேறு திட்டங்களில்நடந்துள்ள முறைகேடுகளைக் கூறி அதிமுக தரப்பு வாக்கு சேகரிக்கிறது.
பெருவாரியாக உள்ள முக்குலத்தோர் வாக்குள் நமக்கே என்றநம்பிக்கையோடுசிறுபான்மை சமூகமான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களிடையேயும்இக்கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
திமுக ஆதரவு பகுதிகள் என கூறப்படும் காஜிமார் தெரு, மகபூப் பாளையம் உள்ளிட்டபகுதிகளில் அதிமுகவினரும் படு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதற்காக அப் பகுதி இஸ்லாமிய சமூக முக்கியஸ்தர்களை அதிமுகவினர் வளைத்துப்போட முயன்று வருகின்றனர்.
இரு வேட்பாளர்களும் வாக்குறுதிகளையும், பணத்தையும் வாரி இறைத்து பிராசரத்தில்ஈடுபட்டிருப்பதைப் பார்த்து பயந்து விடாமல் அவர்களுக்கு கடும் போட்டியைக்கொடுக்கிறது தேமுதிகவின் பிரசாரம்.
அக்கட்சியின் வேட்பாளர் பன்னீர் செல்வம் தொண்டர்கள் புடை சூழ வீடு வீடாகபுகுந்து வாக்கு சேகரிக்கிறார். இவர் இந்தத் தொகுதியில் முக்குலத்தோர்,முஸ்லீம்களுக்கு அடுத்தடியாக மூன்றாவதாக பெரும் எண்ணிக்கையில் உள்ளகோனார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா மதுரையில்முகாமிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
வீடு வீடாக சென்று திமுக, அதிமுக ஆட்சிகளின் குறைபாடுகள், இதுவரைஅவர்களால் நிறைவேற்ற முடியாத மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்டகுறைபாடுகளை புத்தகம் போல பட்டியலிட்டு அதை வாக்காளர்களிடம் கொடுத்துபிரசாரம் செய்து வருகிறது தேமுதிக தரப்பு.
பிரேமலதாவின் எளிமையான பேச்சும், வாக்கு கேட்கும் விதமும் பெண்வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அத்தோடு மிகவும் சாதாரணமுறையில் வாக்குறுதிகளை அவர் சொல்வதும், மக்களிடையே தேமுதிக வேட்பாளர்மீது நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில் உள்ளது.
இப்படி மூன்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் சரிக்குச் சமமாக பிரசாரத்தைமுடுக்கி விட்டிருப்பதால் மதுரை தேர்தல் களம் படு சூடாக காணப்படுகிறது.
இந் நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும்இந்தத் தொகுதியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
ஜெ. 2 நாள் பிரசாரம்:
மதுரையில் ஜெயலலிதா 2 நாட்களுக்கு பிரசாரம் செய்யவுள்ளார்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழக அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
ராஜன் செல்லப்பாவை ஆதரித்து அக்டோபர் 6 மற்றும் 7 ஆகிய இரு நாட்கள் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். 6ம் தேதி தெற்குவாசல் சந்திப்பு, நாடார் வித்தியாசாலை தெரு, மீனாட்சி தியேட்டர், சுப்பிரமணியபுரம், 2வது தெரு, எம்.கே.புரம், ஆண்டாள்புரம், எல்லீஸ் நகர்,சிங்கராயபுரம், ஜின்னா திடல், புட்டுத்தோப்பு தெரு, பேச்சியம்மன் படித்துறை, வடக்கு வெளி வீதி, ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
7ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications