தந்திரி விவகாரம்-சரணடைந்தார் பெச்சு ரகுமான்
திருவனந்தபுரம்:
![]() |
சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு மோகனருவை மிரட்டி ஆபாசப் படம் எடுத்த விவகாரத்தில்தலைமறைவாக இருந்த மலையாள நடிகர் பெச்சு ரஹ்மான் இன்று போலீஸில் சரணடைந்தார்.
சபரிமலை தந்திரியாக இருந்த மோகனருவை கொச்சியில் உள்ள விபச்சார அழகி ஷோபாவுக்கு சொந்தமானவீட்டில் வைத்து விபச்சார அழகி சாந்தாவுடன் ஆபாச கோலத்தில் புகைப்படம் எடுத்த விவகாரத்தில் ஷோபா,அவரது கூட்டாளிகள் அனில், விஜில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
இந்த விவகாரத்தில் தொடர்புடைய, மலையாள நடிகர் பெச்சு ரகுமானின் நண்பர் பிஜூ பீட்டர், ஆபாசப் படம்எடுத்த புகைப்படக்காரர் சத்தார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக இருந்த ரகுமான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கொச்சி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அவரை விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ரகுமான் இன்று சரணடைந்தார். தனது வழக்கறிஞர்களுடன் கொச்சி மத்திய காவல் நிலையத்தில்விசாரணை அதிகாரி ஜி.வேணு முன்னிலையில் ரகுமான் சரணடைந்தார்.
![]() |
ரஹ்மானிடம் மேல் விசாரணை நடத்த வசதியாக அவரை போலீஸ் காவலில் எடுக்க போலீஸார்திட்டமிட்டுள்ளனர்.
சரணடைவதற்கு முன் மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு ரகுமான் பரபரப்பு பேட்டி அளித்தார்.
அதில், சம்பவம் நடந்த பின்னர் முதல் 15 நாட்கள் என்னைத் தலைமறைவாக இருக்கும்படி தந்திரிமோகனருதான் கூறியிருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர் நாடகமாடி விட்டார்.
முதலில் போலீஸில் ஒரு புகாரைக் கொடுத்த அவர் பின்னர் அதை மாற்றி வேறு புகாரை கொடுத்தார். அதில்உண்மை கிடையாது. என்னை மையமாக வைத்து மோகனரு நாடகமாடி விட்டார்.நான் ஆகஸ்ட் 4ம் தேதி சரணடைய வந்தேன். ஆனால் என்னைக் கேவலப்படுத்தும் விதமாக அவதூறு செய்திகள்வெளியாகின. இதனால் மனம் நொந்து எனது முடிவை வாபஸ் பெற்றேன். இப்போத தலைமறைவாகி 62நாட்களாகின்றன.
எனது ஜாமீன் மனு தள்ளுபடி ஆகி விட்டது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி தற்போது சரணடைகிறேன் என்றார்ரகுமான்.















Click it and Unblock the Notifications