பணிக்கர் மீது நடவடிக்கை-கேரள அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

Panicker

சபரிமலையில் ஐயப்பன் சுவாமி விக்கிரகத்தை பெண் தொட்டதாக பரபரப்பைஏற்படுத்திய உன்னிகிருஷ்ண பணிக்கர் மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசுஉத்தரவிட்டுள்ளது.

சபரிமலை கோவிலில் தேவ பிரசன்னம் பார்த்த ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடரான உன்னிகிருஷ்ணபணிக்கர், கோவிலுக்குள் பெண் வாசம் உள்ளதாகவும், சுவாமி சிலையை அவர் தொட்டதாகவும் இதனால்ஐயப்பன் கடும் கோபத்தில் உள்ளதாகவும் அதிர்ச்சியைப் பரப்பினார்.

இவர் அவ்வாறு சொன்ன அடுத்த நாளே, நான் தான் அந்தப் பெண் என்று பேக்ஸ் அனுப்பினார் கன்னட நடிகைஜெயமாலா.

Panicker

இது தொடர்பாக நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில், உன்னியும் ஜெயமலாவும் சேர்ந்து கொண்டு சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

சபரிமலையில் உன்னி கிருஷ்ண பணிக்கர் தேவ பிரசன்னம் பார்த்தபோது அவரது உதவியாளரான ரகுபதிகோவிலின் தேவசம் போர்டு அலுவலகத்தில் இருந்தே ஜெயமலாவுக்கு பேக்ஸ் அனுப்பியது தெரியவந்தது.

சபரிமலை ஐய்யப்பன் சிலையை தொட்டதாக ஒரு பேக் அனுப்புங்கள் என்று ஜெயமலாவுக்கு அதில் தகவல்அனுப்பப்பட்டது. இதை போலீஸ் விசாரணையின்போது ரகுபதி ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து உன்னி-ஜெயமாலா ஆகிய இருவரும் சேர்ந்து நடத்திய நாடகம் வெளியில் வந்தது.

இதைத் தொடர்ந்து இந்த சதியை நடத்திய உன்னிகிருஷ்ண பணிக்கர் மற்றும்ஜெயமாலா மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக உன்னிகிருஷ்ண பணிக்கர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்குகேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் உன்னி விரைவில் கம்பி எண்ணும் சூழல்ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+