போலி கிரெடிட் கார்ட்-மோசடி வாலிபர் கைது
சென்னை:
![]() |
போலி கிரெடிட் கார்டு மூலம் நகைக் கடையில் ரூ. 41,000 மதிப்புள்ள நகைகளைமோசடியாக வாங்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தி.நகரில் உள்ள கேரளா ஜூவல்லரி என்ற நகைக் கடைக்கு ஒரு வாலிபர்வந்தார். சரளமான ஆங்கிலத்தில் பேசிய அவர் ரூ. 41,000 மதிப்புள்ள நகைகளைவாங்கினார்.
அதற்குரிய பணத்தைக் கொடுக்க கிரெடிட் கார்டு ஒன்றை ஊழியர்களிடம் கொடுத்தார்.
அது சிட்டி வங்கியைச் சேர்ந்த ரஷ்ய கிரெடிட் கார்டு ஆகும். அந்த கார்டைப் பார்த்தஊழியர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து உங்களது அடையாளஅட்டையைக் காட்டுங்கள் என்று ஊழியர்கள் கோரினர். இதையடுத்து அந்த வாலிபர்,காரில் இருக்கிறது, இருங்கள் வருகிறேன் என்று கூறி விட்டு வெளியே சென்றார்.
ஆனால் அந்த வாலிபர் திரும்பி வரவில்லை. இதையடுத்து அந்த கார்டைவினியோகித்த சிட்டி வங்கியுடன் நகைக் கடை உரிமையாளர் தொடர்பு கொண்டுவிசாரித்தார். அப்போதுதான் அது போலியான கிரெடிட் கார்டு என தெரிய வந்தது.
இதையடுத்து சிட்டி வங்கியின் துணைத் தலைவர் சிவக்குமார் போலீஸில் புகார்கொடுத்தார். இதைத் தொடர்ந்து அந்த போலி கார்டை கொண்டு வந்த வாலிபரைப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.போலீஸ் தனிப்படை விசாரணை நடத்தி நடேசன் பூங்கா பகுதியில் பதுங்கியிருந்தஅந்த வாலிபரை போலீஸார் பிடித்தனர். அவரது பெயர் அருண் பிரசாத். தர்மபுரியைச்சேர்ந்த அந்த நபர் போலீஸில் கொடுத்த வாக்குமூலம்:
நான் கோடம்பாக்கத்தில் ஜிம் நடத்தி வருகிறேன். அங்கு உதயக்குமார் என்பவர்அடிக்கடி வருவார். அவர் என்னிடம் மலேசியாவைச் சேர்ந்த கணேசன், கேரளாவைச்சேர்ந்த சிபு ஆகியோர் எனக்கு நெருங்கிய நண்பர்கள்.
அவர்கள் போலியாக கிரெடிட் கார்டுகளைத் தயாரித்து தருவார்கள். அந்த கார்டுகள்மூலம் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டும். அவற்றை சிபு மலேசியா கணேசன்ஆகியோரிடம் கொடுத்தால் பணம் தருவார்கள் என்று ஆசை காட்டினார்.
அதை நம்பி முதலில் விஸ்வாஸ் கோல்டு சிட்டி நகைக் கடைக்குச் சென்று ரூ.56,000க்கு நகைகள் வாங்கினேன். அவர்கள் சந்தேகமடைந்து அடையாள அட்டைகேட்டதால் அங்கிருந்து தப்பி வந்து விட்டேன். பின்னர் விவேக் அன் கோவிற்குசென்று பொருட்கள் வாங்கினேன். அங்கும் அடையாள அட்டை கேட்டதால் தப்பிவிட்டேன்.
இப்போது கேரளா ஜூவல்லரியில் நகை வாங்கப் போய் மாட்டிக் கொண்டேன் என்றுபோலீஸாரிடம் தெரிவித்தார் அருண் பிரசாத்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் 15 நிாள் காவலில் சிறையில்அடைத்தனர்.
அருண் பிரசாத்துக்கு போலி கிரெடிட் கார்டுகளைக் கொடுத்த சிபு மற்றும் கணேசனைபோலீஸார் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications