நெய்யாற்று நீர்-இது தான் கேரளா விவரம்
திருவனந்தபுரம்:
கேரளாவின் நெய்யாற்றிலிருந்து தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தண்ணீர்திறந்து விட தயாராக உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாசனம் மற்றும்குடிநீர்த் தேவைக்காக கேரளாவின் நெய்யாற்றின் இடது கரையிலிருந்து தண்ணீர்தரப்பட்டு வந்தது. கடந்த 2004ம் ஆண்டு இதை கேரள அரசு நிறுத்து விட்டது.நெய்யாற்றிலிருந்து கேரளா தண்ணீர் திறந்து விடக் கோரி குமரி மாவட்ட விவசாயிகள்தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக கன்னியாகுமயில்போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால் கேரள அரசு இதைக் கண்டுகொள்ளாமல்இருந்து வந்தது.
இந் நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகத்தை டார்ச்சர்செய்து வருகிறது கேரளம். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு கேரளத்துக்குவிரோதமாக இருப்பதால் தமிழகத்துடன் பிரச்சனையை பேசித் தீர்க்க கேரளம்ஆர்வம் காட்டி வருகிறது.
இந் நிலையில் நெய்யாற்றிலிருந்து தண்ணீர் திறந்து விட தயாராக உள்ளதார கேரளசட்டசபையில் முதல்வர் அச்சுதானந்தன் தாக்கல் செய்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
தமிழகத்துடன் நிலவும் நதி நீர்ப் பிரச்சினைகளில் சுமூக தீர்வு ஏற்பட ஒரு அடையாளநடவடிக்கையாக நெய்யாறு அணையிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடகேரள அரசு விருப்பம் கொண்டுள்ளது.
இரு மாநிலங்களுக்கும் இடையிலான நதி நீர்ப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைமூலம் சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.அதை ஏற்கும் விதமாகவும் இந்த நடவடிக்கையை கேரள அரசு மேற்கொண்டுள்ளது.
நெய்யாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு கடந்தஜூன் 10ம் தேதி நான் தமிழக முதல்வர் கருணாநிதியை சென்னையில் சந்தித்தபோதுஎன்னிடம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்கும் வகையில் இந்த நடவடிக்கைஎடுக்கப்படுகிறது.
இதேபோல, தமிழகத்துடன் உள்ள மற்ற நிதி நீர்ப் பிரச்சினைகளிலும் சுமூக தீர்வுஏற்பட கேரள அரசு விரும்புகிறது என்று கூறியுள்ளார் அச்சுதானந்தன்.
பல காலமாக கோரியும் விடாத நெய்யாற்று நீரை தற்போது விட கேரள அரசு முடிவுசெய்திருப்பது குமரி மாவட்ட மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஆனால் நெய்யாற்று தண்ணீரை விடுவித்து விட்டு, பெரியாறு அணை விவகாரத்தில்தமிழகத்துக்கு பெரிய ஆப்பு வைக்கும் கேரளத்தின் திட்டத்தையும் மனதில் கொள்ளவேண்டியது அவசியம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications