எதிர் சாட்சி சொன்னவரை கடத்திய அமைச்சர்?
சென்னை:
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமிக்கு எதிராக சென்னைஉயர்நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன மீனவரைக் காணவில்லை என்று புகார்கூறப்பட்டுள்ளது. அமைச்சரின் ஆட்கள்தான் அவரைக் கடத்தியிருக்க வேண்டும் எனகுற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள கே.வி.கே. குப்பம் என்ற மீனவர்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுகவுக்குஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறது.இதனால் கோபமடைந்த அமைச்சர் கே.பி.பி.சாமியின் ஆட்கள் கடந்த மே மாதம்இந்தக் கிராமத்திற்கு வந்து கிராமத்தினரை கண்மூடித்தனமாக தாக்கினர்.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், செல்லத்துரை என்ற 53வயது மீனவர், அமைச்சர் சாமியின் சகோதரரும், அவரது கூட்டாளிகளும் வந்துதங்களைத் தாக்கியதாகவும், மிரட்டியதாகவும், கிராமத்திற்குள் நுழையத் தடைவிதித்தாகவும் கூறி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந் நிலையில் கடந்த சில நாட்களாக செல்லத்துரையைக் காணவில்லை. அவரைசாமியின் ஆட்கள்தான் கடத்தியிருக்க வேண்டும் என்று கிராமத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரணை சந்தித்தசெல்லத்துரையின் மனைவி பிரேமாவதி புகார் ஒன்றை அளித்தார்.
அதில் அமைச்சர் சாமியின் சகோதரர் சொக்கலிங்கம் மற்றும் அவரது ஆட்கள்தான்தனது கணவரை கடத்திச் சென்றிருப்பதாகவும், தனது கணவரை மீட்டுத் தருமாறும்அதில் கோரியுள்ளார்.
செல்லத்துரை மாயமாகியுள்ளதால் கே.வி.கே.குப்பம் பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications