குமரியை கலக்கிய போதை சப்ளை ஆசாமி கைது
நாகர்கோவில்:
![]() |
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவ, மாணவிகள், ஆட்டோ டிரைவர்கள், நர்சுகள்உள்பட பலருக்கும் போதை ஊசிகளை சப்ளை செய்த நபரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
நாகர்கோவிலை அடுத்துள்ள ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தைச் சேர்ந்தவர்இயேசுதாஸ். இவர் மருந்துக் கடை நடத்தி வந்தார். இவரது தம்பி மரிய அற்புதம்.பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மரிய அற்புதம், சில காலம் தனது அண்ணனின்கடையில் வேலை பார்த்து வந்தார்.
மருந்துக் கடையில் வேலை பார்த்தபோது ஊசி போடுவது எப்படி, என்ன என்னமருந்துக்கு என்ன என்ன பலன் என்பது குறித்து அறிந்து கொண்டார். இந் நிலையில்சரியான வருமானம இல்லாததால் இயேசுதாஸ், தனது கடையை மூடி விட்டார்.
இதனால் மரிய அற்புதத்திற்கும் வேலை இல்லாமல் போனது. கொஞ்ச காலம்வெறுமனே ஊர் சுற்றிய அவருக்கு போதை ஊசி மூலம் சம்பாதிக்கலாம் என்றஎண்ணம் வந்தது.தனது அண்ணன் நடத்தி மருந்துக் கடைக்கு இருந்த உரிமத்தைப் பயன்படுத்தி சிலமருந்து நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு போதை தரும் மருந்துகளை சப்ளைசெய்ய முடியுமா என்று கேட்டார். டெல்லி நிறுவனம் ஒன்று போதை மருந்துகளைசப்ளை செய்ய முன் வந்தது.
இதையடுத்து கடந்த 2 வருடமாக அந்த நிறுவனத்திடமிருந்து போதைமருந்துகளையும், ஊசிகளையும் வாங்கி விற்கத் தொடங்கினார் மரிய அற்புதம்.கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், மருத்துவமனைகளை வலம் வந்து இந்த போதைமருந்துகளையும், ஊசிகளையும் விற்பாராம் அற்புதம்.
முதலில் சில வாடிக்கையாளர்களே கிடைத்தனர். ஆனால் போகப் போக ஏராளமானபேர் வாடிக்கையாளர்களாகினர். மாணவ, மாணவியர், மருத்துவமனை ஊழியர்கள்,நர்சுகள், ஆட்டோ டிரைவர்கள் என பல தரப்பான வாடிக்கையாளர்கள் அற்புதத்தைதேடி வரத் தொடங்கினர்.
மாவட்டம் முழுவதும் மரிய அற்புதத்திற்கு வாடிக்கையாளர்கள் வட்டம் உருவானது.இதனால் பணம் கொட்டத் தொடங்கியது. இதையடுத்து செல்போன் வசதியைஏற்படுத்தினார் அற்புதம். தன்னைத் தேடி நேரில் வர தயங்குபவர்கள் போன் மூலம்ஆர்டர் கொடுத்தால் வீடு தேடி வந்து தரும் திட்டம் இது.
மேலும், பல முக்கியஸ்தர்களின் வீடுகளுக்கு நேரிலும் போய் சப்ளை செய்துவந்துள்ளார். ஊசி போட்டுக் கொள்ளத் தெரியாதவர்களுக்கு அற்புதமே ஊசியையும்போட்டு சொல்லிக் கொடுத்து அனுப்புவாராம்.
இவரது சேவை மாவட்டம் முழுவதும் வியாபித்து, மாவட்ட எல்லையைத் தாண்டஆரம்பித்தததைத் தொடர்ந்து இதுதொடர்பாக போலீஸாருக்கு புகார்கள் வரஆரம்பித்தன. இதைத் தொடர்ந்து போலீஸார் கண்காணிப்பை மேற்கொண்டனர்.
நேற்று முன் தினம் மாலை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைவளாகத்தில் வைத்து மரிய அற்புதத்தை போலீஸார் பிடித்தனர். அவரிடமிருந்துசெல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விடிய விடிய காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.இந்த சமயத்தில் மரிய அற்புதத்தின் செல்போனுக்கு ஏராளமான போன் கால்கள்வந்தன. போதை மருந்து கேட்டு போன் செய்தவர்கள் இவர்கள். பெண்கள் பலரும்கூட பேசினர்.
மரிய அற்புதத்தின் பின்னால் பெரிய கும்பலே இருக்கும் என தெரிய வந்துள்ளது. பிறமாவட்டங்களுக்கும் கூட இவர்கள் போதை ஊசியை விற்றிருக்கலாம் எனவும்போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications