துருக்கி விமானம் கடத்தல்-இத்தாலியில் சரண்
அங்காரா:
![]() |
துருக்கி நாட்டுக்கு போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் வருவதை எதிர்த்து துருக்கிநாட்டை 2 இளைஞர்கள் விமானத்தைக் கடத்தினர்.
இருப்பினும் அந்த விமானத்தை இத்தாலி நாட்டு போர் விமானங்கள் சுற்றி வளைத்துஇத்தாலியில் தரையிறக்கின.
அல்பேனிய தலைநகர் திரானாவிலிருந்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்குதுருக்கி பயணிகள் விமானம் கிளம்பியது. இதில் 107 பேர் பயணம் செய்தனர்.இவர்களில் 5 பேர் துருக்கியர்கள், மற்றவர்கள் மலேசியா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்டநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
![]() |
இதில் இந்தியாவைச் சேர்ந்த மாடலான நாடாஷா சூரியும் இருந்தார். இவர் போலந்துதலைநகர் வார்ஸாவில் நடந்த மிஸ் வோர்ல்ட் போட்டியில் பங்கேற்றுவிட்டு(தோற்றுவிட்டு) அங்கிருந்து துருக்கி சென்று கொண்டிருந்தார்.
விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் ஹகன் என்ற வாலிபர் உள்ளிட்ட 2 துருக்கியபயணிகள் எழுந்து விமான பைலட்டை மிரட்டி தாங்கள் சொல்லும் இடத்திற்குவிமானத்தை செலுத்துமாறு உத்தரவிட்டனர். மேலும் விமானம்கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பயணிகளிடம் அறிவித்தனர். இதனால்விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது விமானம் இத்தாலி வான்வெளியில் பறந்து கொண்டிருந்தது. இதையடுத்துவிமானம் கடத்தப்பட்டது குறித்து இத்தாலி நாட்டுக்குத் தகவல் கொடுத்தார் விமானி.
![]() |
இதையடுத்து இரண்டு எப்.16 ரக போர் விமானங்களை இத்தாலி அனுப்பியது. அந்தஇரு போர் விமானங்களும், துருக்கி விமானத்தை சுற்றி வளைத்து விமானத்தைதரையிறக்க உத்தரவிட்டன.
அதே நேரத்தில் விமானத்தைக் கடத்தியதாக அறிவித்த 2 பேரிடமும், இத்தாலிபோலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இஸ்லாமுக்கு எதிராக கருத்துதெரிவித்த போப்பாண்டவர் துருக்கிக்கு வரக் கூடாது. இதை வலியுறுத்தவேவிமானத்தை கடத்தியுள்ளதாக இரு துருக்கியர்களும் தெரிவித்தனர்.
இது குறித்து ரோம் அதிகாரிகளுடன் தான் நீங்கள் பேச வேண்டும் என போலீசார்கூறியதையடுத்து விமானக் கடத்தலைக் கைவிடுவதாக இருவரும் அறிவித்தனர்.இதையடுத்து இத்தாலி நகரின் பிரிந்திசி என்ற நகரில் விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறக்கப்பட்டதும் 2 துருக்கியர்களும் மற்ற பயணிகளிடம் மன்னிப்புகேட்டுக் கொண்டனர். பின்னர் இத்தாலி போலீஸாரிடம் சரணடைந்தனர். விமானக்கடத்தில் எந்த அசம்பாவிதம் நடைபெறவில்லை. பயணிகளும், விமானஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உஷார் நிலையில் இந்தியா:
இந் நிலையில் இந்திய விமானங்களை தீவிரவாதிகள் கடத்தலாம் என்ற பீதிகாரணமாக நாடு முழுவதும் உள்ள 13 முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கில் முகம்மது அப்சல் குருவுக்குஉச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது. வரும் 20ம் தேதி அவரைதூக்கிலிட ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அவருக்கு பொது மன்னிப்பு கோரிஜனாதிபதி கலாமிடம் அப்சலின் மனைவி கருணை மனு கொடுத்துள்ளார்.
இதன் மீது ஜனாதிபதி முடிவெடுக்கும் வரை தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படும்.
இந் நிலையில் அப்சலைத் தூக்கிலிடுவதை எதிர்த்து இந்திய விமானங்களைக் கடத்ததீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல்கள் வந்துள்ளன.
இதையடுத்து நாடு முழுவதும் 13 முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்புபன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட விமான நிலையங்கள் இதில் அடங்கும்.வட மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களிலிருந்துதான் விமானக் கடத்தல்நடக்கலாம் என உளவுப் பிரிவு எச்சரித்திருப்பதால் வட மாநில விமான நிலையங்கள்முழுமையான பாதுகாப்பு ஸ்கேனரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை















Click it and Unblock the Notifications