ஜனாதிபதியை சந்திக்கும் அப்சல் குடும்பத்தினர்
டெல்லி:
![]() |
நாடாளுமன்றம் மீதான தாக்குதலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முகமதுஅப்சலின் மனைவி மற்றும் குடும்பத்தினர் இன்று ஜனாதிபதி அப்துல் கலாமை நேரில்சந்திக்கின்றனர்.
2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். 5 பயங்கரவாதிகள்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளியான முகமது அப்சலுக்கு தூக்கு தண்டனைவிதிக்கப்பட்டு, வரும் 20ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது.
இந் நிலையில் அப்சலை தூக்கிலிடக் கூடாது என காஷ்மீர் அமைப்புகள் கோரிக்கைவிடுத்துள்ளன. காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத்தும் இந்தக் கோரிக்கையைவிடுத்துள்ளார்.
இந் நிலையில் இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரிடெல்லியில் நேற்று காந்தியவாதியான நிர்மலா தேஷ்பாண்டே, மேதா பட்கர்,எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் அப்சலின் மகன், குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
இந் நிலையில் அப்சலின் மனைவி தபசும், தனது மகன் மற்றும் மாமியாருடன் நேற்றுமுன்தினம் டெல்லி வந்து ஜனாதிபதி அலுவலகத்தில் தனது கணவரின் மரணதண்டனையை ரத்து செய்யக் கோரி கருணை மனு அளித்தார்.மேலும், ஜனாதிபதியை நேரில் சந்திக்கவும் அனுமதி கோரினார். அதே நேரத்தில்நாடாளுமன்றத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாதுகாப்பு படை வீரர்களின்குடும்பத்தினரும் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வந்து, அப்சலில் மரண தண்டனையைரத்து செய்யக் கூடாது என்று மனு அளித்தனர்.
இந் நிலையில் அப்சலின் மனைவி தபசுமை சந்திக்க ஜனாதிபதி அப்துல் கலாம், இன்றுபிற்பகல் 1.45 மணிக்கு நேரம் ஒதுக்கியுள்ளார்.
ஜனாதிபதியை தபசும், அப்சலின் தாயார் ஆயிஷா பேகம், மகன் காலிப் மற்றும்வழக்கறிஞர்கள் நந்திதா ஹக்ஸர், பஞ்சவுலி ஆகியோர் சந்திக்கவுள்ளனர்.
இதற்கிடையே குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் மரண தண்டனை விதிப்பதுதள்ளிப் போகும் என்று தெரிகிறது. சட்டப்படி, குடியரசுத் தலைவரிடம் கருணை மனு வழங்கினால்அதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் வரை தண்டையை நிறைவேற்ற முடியாது.
எனவே அப்சலுக்கு திட்டமிட்டபடி 20ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படுமா என்பதுகேள்விக்குறியாகியுள்ளது.
திருமாவளவன் கோரிக்கை:
இதற்கிடையே, அப்சலுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்து, அவருக்கு ஆயுள்தண்டனையை வழங்கி மன்னிப்பும், கருணையும் காட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் திருமாவளவன், ஜனாதிபதி கலாமுககு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் அனுப்பியுள்ள கடிதத்தில், உலகில் 129 நாடுகளில் மரண தண்டனைஒழிக்கப்பட்டு விட்டது. மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று அறிவியல் பூர்வமானஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன.
மக்கள் விரோதச் சட்டம் என்று பெரும்பான்மையான அரசியல் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டு பின்னர்கைவிடப்பட்ட பொடா சட்டத்தின் கீழ் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவற்றைப் பரிசீலித்து, அப்சல் மீது கருணை காட்டி, அவரது குற்றத்தை மன்னித்து, மரண தண்டையை ரத்துசெய்ய முன்வர வேண்டும். மேலும், மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாடாக இந்தியா உலக அரங்கில்பெருமையுடன் விளங்கிட உரிய நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications