பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாது

Subscribe to Oneindia Tamil

நெல்லை:

முரசு சின்னத்தை நாங்கள் முடக்கியதாக கூறுகிறார்கள். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது எனமுதல்வர் கருணாநிதி கூறினார்

திமுக கூட்டணி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குஆதரவாக பிரசாரம் செய்வதற்காக முதல்வர் கருணாநிதி இன்று காலை நெல்லைவந்தார்.

ரயில் நிலையத்தில் அவருக்கு திமுகவினர் படு உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:

கேள்வி: உள்ளாட்சி தேர்தலுக்கு பின் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?

பதில்: இப்போது எதையும் சொல்ல முடியாது, உங்கள் கேள்வி அமைச்சர்களை எச்சரிக்குமானால் எனக்குமகழ்ச்சியே.

கேள்வி: தேமுதிகவின் முரசு சின்னம் முடக்கப்பட்டதுக்கு திமுகவே காரணம் என்று விஜய்காந்த் கூறுகிறாரே?

பதில்: முரசு சின்னம் எங்கே முடக்கப்பட்டுள்ளது, மதுரையில் அந்த சின்னம் தானே உள்ளது. பொய் சொன்னவாய்க்கு போஜனம் கிடையாது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் எந்த சின்னங்கள் தேர்தல் கமிஷனால்அறிவிக்கப்பட்டதோ அவைதான் இப்போதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யார் தலையீடும் இல்லை.

கேள்வி: சிக்குன் குனியாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படுமா?

பதில்: தமிழ்நாட்டில் இதுவரை சிக்குன் குனியா நோயால் யாரும் இறந்ததாக இதுவரை தகவல் இல்லை. அப்படிசிக்குன் குனியா நோயால் இறந்தவர்கள் இருந்தால், அவர்கள் குடும்பத்தினருக்கு கேரள அரசு நிதி உதவிவழங்குவது போல் தமிழகத்திலும் நிவாரணம் வழங்கப்படும்.

கேள்வி: அதிமுகவில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வந்தது போல மதிமுக வந்தால் ஏற்று கொள்வீர்களா?

பதில்: அதிமுகவில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வந்தது போல மதிமுக எங்கள் கூட்டணிக்கு வந்தால்ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது. அதேபோலஉள்ளாட்சியிலும் நல்லாட்சி நடைபெற வேண்டுமானால், திமுக கூட்டணிக்கு மக்கள்வாக்களிக்க வேண்டும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

தற்போது முதல் கட்டமாக 26,000 ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம்தந்துள்ளோம். நிலம் இருக்கும் வரை 3 மாதங்களுக்கு ஒருமுறை நிலம் வழங்கும்பணி தொடரும். நாங்குனேரி தொழில்பூங்கா விரைவில் நடைமுறைக்கு வரும்என்றார்.

திமுக ஒரு மகாநதி:

முன்னதாக நெல்லை புறப்படும் முன் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் களமாயினும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலாயினும், ஓட்டளிக்கப் போகும் மக்களுக்கு இனியும்சொல்வதற்கு என்ன இருக்கிறது?

தேர்தல் அறிக்கை மூலம் அளித்த வாக்குறுதிகளையும், ஆளுநர் உரையில் வழங்கிய திட்ட அறிவிப்புகளையும்,பட்ஜெட் திட்டங்களையும்,ஒவ்வொன்றாகவும், படிப்படியாகவும், இந்த அரசு நிறைவேற்றி வருவதை தமிழக மக்கள் நன்றியுணர்வோடு நினைத்துப் பார்ப்பதையும்,

பாராட்டி மகிழ்வதையும் எதிலேயும் பார்த்து தெரிந்து கொள்வதை விட, எதிர் தரப்பினர் எரிச்சல் கொண்டு ஏசிப் பேசுகிறார்களே அவற்றையேகண்ணாடிகளாக கொண்டு நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

30,000 கலர் டிவிக்கள் சமத்துவபுரங்களுக்கும், மறுவாழ்வு இல்லங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 2வது கட்டமாக 25 லட்சம் டிவிகள் வழங்கஉலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரலாம் என்று சட்டசபை கட்சிகள் குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

24, 949 விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு 26, 321 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளதோடு, இத்திட்டம் தொடர்ந்துநடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் நிறைய இடங்களில் போட்டியிட இயலாவிடினும் நிறைவான மனதுடன் களமிறங்கியிருக்கின்றனர். ஒன்றிரண்டு இடங்களில் மட்டும்நன்மை கருதி கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களே போட்டியிட்டுக் கொள்ளும் சூழ்நிலை. பெரும் பிளவு என்பது பிறர் பிரச்சாரம் செய்யலாம்.

ஆனால் நமது கூட்டணி இந்த மாநில வளர்ச்சிக்காக பெருகியோடி வரும் மகாநதி. அதில் எங்காவது ஓரிரு இடங்களில் அது பெருகி வரும் வேகத்தில்சுழல்கள் தோன்றலாம். ஆனால் அந்தச் சுழல் மகாநதியை வற்றிவிடச் செய்யாது, சுழலையும் கடந்து நீந்துவோர் சுலபமாக கரையேறுவர். நாம்சுகமாக கரையேறுவோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+