அக் 28ல் ஜெனீவாவில் இலங்கை அமைதி பேச்சு?
கொழும்பு:
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே வரும் 28ம் தேதி முதல்30ம் தேதி வரை ஜெனீவாவில் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும்எனத் தெரிகிறது.
முடங்கிப் போயுள்ள இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கநார்வே தூதுக் குழு முயற்சி மேற்கொண்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு வரசம்மதிப்பதாக விடுதலைப் புலிகள் அமைப்பும், இலங்கை அரசும் சம்மதித்துள்ளன.இலங்கை வந்துள்ள நார்வே தூதர் ஜான் ஹேன்சன் பேயர், அரசுத் தரப்புப்பிரதிநிதிகளையும், விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கான இடம் மற்றும் தேதி ஆகியவை முடிவுசெய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. வருகிற 28ம் தேதி முதல் 30ம் தேதி வரைஜெனீவா நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது.
இதில் நார்வேயும் பங்கேற்கவுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை அரசுத் தரப்பில் கூறுகையில், அக்டோபர் 28ம் தேதி முதல்30ம் தேதி வரை பேச்சுவார்த்தையை ஜெனீவாவில் நடத்தலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கும் காலத்தில், விடுதலைப்புலிகள் தாக்குதலில் ஈடுபட்டால் அவர்களைத் திருப்பித் தாக்க ராணுவத்திற்குஅதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.
புலிகளுடன் பேசினால் ஆதரவு வாபஸ்:
இந் நிலையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் இலங்கை அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறப்படும் என சிங்கள தீவிரவாதகட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
ராஜபக்ஷே அரசு ஆட்சியில் தொடர ஜேவிபியின் ஆதரவு மிக அவசியம். இந் நிலையில் ஆதரவை வாபஸ் பெற்று ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாகஜேவிபி அறிவித்துள்ளது.
இது குறித்து நிருபர்களிடம் சில்வா கூறியதாவது,
விடுதலைப்புலிகளுடன் அரசு பேச்சு வார்ததை நடத்த முயற்சிக்கிறது. இது எந்த அடிப்படையில் நடக்கிறது என புரியவில்லை. அதிபர் ராஜபக்சே தேர்தலின்போது மக்கள் முன் வைத்த செயல் திட்டத்தில் இருந்து விலகுகிறார். எனவே நாங்கள் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்துபரிசீலிப்போம்.
தீவிரவாதமும், அன்னிய நாடு தலையீடும் ஆபத்தனவை. எனவே நாட்டை தீவிரவாதத்தில் இருந்து மீட்க 20 அம்ச திட்டத்தை அரசு முன் வைத்தோம்.ஆனால் இதை அரசு ஏற்கவில்லை.
போர் நிறுத்த ஒப்பந்தம் 5 ஆண்டு இருந்தால் விடுதலைப் புலிகளுக்கு தனி நிர்வாகம் அங்கீகாரம் கிடைத்து விடும். இதனால் தான் விடுதலைப் புலிகள்போர் நிறுத்தத்தை கடைபிடிக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு பலன் அளிக்கும் இந்த ஒப்பந்தத்தை அரசு ஏன் தொடர வேண்டும் என்றார்.
ஜேவிபியின் மிரட்டலை எதிர்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க ராஜபக்ஷே தயாராகி வருவதுகுறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கொழும்பு நகரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வெல்லவெட்டியில் சக்தி வாய்ந்த கண்ணி வெடியை ராணுவத்தினர் கண்டு பிடித்துஅகற்றியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications