பாதுகாப்பு கோரும் 155 அதிமுக வேட்பாளர்கள்
சென்னை:
சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி155 வார்டுகளிலும் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் சென்னை மாநகரகாவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 155 வார்டுகளிலும் அதிமுக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர்போட்டியிடுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளஅதிமுகவினரை போலீஸார் கைது செய்து வருவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.இதுதொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ. பதர் சையத் காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்து புகார் ஒன்றைக்கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து 155 வேட்பாளர்களும் ஒன்றாகத் திரண்டு மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்குவந்தனர். ஆட்டோ, கார், மோட்டார் சைக்கில் என பல வகையான வாகனங்களில் இத்தனை பேரும் வந்ததால்மினி ஊர்வலம் போல அது காணப்பட்டது.
அதிமுக கூட்டணிக் கட்சியினர் வருவது குறித்து அறிந்ததும் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.
வேட்பாளர்கள் ஆணையர் அலுவலகத்தை அடைந்ததும் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் வேட்பாளர்களும், அதிமுக எம்.எல்.ஏக்கள் சேகர்பாபு, கலைராஜன் உள்ளிட்டோர் மட்டும் உள்ளேஅனுமதிக்கப்பட்டனர்.
ஆணையர் அறைக்கு முன்பாக அனைவரும் நிறுத்தப்பட்டனர். பின்னர் பத்து பேர் மட்டும் ஆணையர் லத்திகாசரணை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் உள்ளே சென்று ஆணையரிடம் அதிமுக கூட்டணிக் கட்சியினரை போலீஸார் குறி வைத்து கைதுசெய்கிறார்கள். திமுகவினர் தாக்கி வருகின்றனர். எனவே வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.
அதன் பின்னர் மாநில தேர்தல் ஆணையத்திற்கும் அதிமுக கூட்டணியினர் சென்று அங்கும் இதேபோல ஒருமனுவைக் கொடுத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications