சம ஓட்டுக்கள் பெற்றால் குலுக்கல் !!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் இரு வேட்பாளர்கள் சம அளவிலான ஓட்டுக்களைப்பெற்றிருந்தால், குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார் எனமாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சந்திரசேகரன் அளித்துள்ள பேட்டி:உள்ளாட்சித் தேர்தலுக்காக நான்கு நிறங்களில் (வெள்ளை, இளம் சிவப்பு, பச்சை,மஞ்சள்) வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் நான்கு ஓட்டுக்களைப் செலுத்த வேண்டியிருக்கும். அந்த வாக்குச்சாவடிகளில் நான்கு வாக்குப் பெட்டிகள் இருக்காது. ஒரே பெட்டியில் தான்வாக்குகளை செலுத்த வேண்டும்.

இந்த வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடத்த ஒரு அதிகாரியும், பஞசாயத்துதலைவருக்கு ஒரு அதிகாரி, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு ஒருவர்,மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு ஒரு அதிகாரி மற்றும்அடையாள மை இட ஒரு அதிகாரி என ஐந்து பேர் இருப்பார்கள்.

நான்கு ஓட்டுக்களை செலுத்துவதால் கால தாமதம் ஆகாது. வாக்குச் சாவடிகளில்1500 ஓட்டுக்களைப் போடும் வகையில ஒரு வாக்குப் பெட்டி, 500ஓட்டுக்களுக்கென ஒரு பெட்டி, 350 ஓட்டுக்களுக்காக ஒரு பெட்டி எனவைக்கப்பட்டிருக்கும்.

13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களுக்கு 12ம் தேதி இரவே பலத்தபாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டு விடும்.

விரலில் வைக்கப்படவுள்ள அடையாள மை, எளிதில் அழியாத அளவுக்குதரமானதாக தயாரிக்கப்பட்டுள்ளது.மைசூரில் இந்த மை தயாரிக்கப்பட்டுள்ளது.மையை மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பும் முன்பு அதன் தரம்பரிசோதிக்கப்பட்டு விடும்.

மலைப் பகுதிகளில் தற்போது நல்ல சாலை வசதி உள்ளது. அப்படி வசதி இல்லாதபகுதிகளுக்கு கழுதை, குதிரைகள் மூலமும், கூலியாட்கள் மூலம் வாக்குப் பெட்டிகள்,பிற பொருட்கள் கொண்டு செல்லப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சிலபகுதிகளில் படகுகள் மூலம் கொண்டு செல்லப்படும்.

வாக்குச் சீட்டுக்கள் தமிழ் தவிர பிற மொழியில் அச்சடிக்கப்பட மாட்டாது. தமிழில்மட்டுமே வாக்குச் சீட்டுக்கள் இருக்கும். வேட்பாளர்களின் பெயர்கள் தமிழ் அகரவரிசையில் இடம்பெற்றிருக்கும்.

வாக்குச் சீட்டுக்களை அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 6 அல்லது 7ம்தேதிக்குள் முடிந்து விடும். வாக்கு எண்ணிக்கை 18ம் தேதி காலை 8 மணிக்குதொடங்கும். மொத்தம் 866 இடங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இதுவரை 572 புகார்கள் வந்துள்ளன. சின்னம்வழங்குவது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, வேட்பு மனுதள்ளுபடியானது, சட்டம் ஒழுங்கு குறித்து இந்தப் புகார்கள் வந்துள்ளன.

உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்திற்கு (தலைவர் பதவிக்கு) தேர்ந்தெடுக்கப்படும்பெண்கள் அவர்களே சுயமாக அந்த நிர்வாகத்தை நடத்த வேண்டும். அவர்களதுகணவர்கள் இதில் உதவக் கூடாது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின்கணவர்கள் நிர்வாகத்தில் தலையிடுவதாக தெரிய வந்தால், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

பஞ்சாயத்துத் தலைவர் சம அளவில் ஓட்டுக்களைப் பெற்றால், குலுக்கல் முறையில்வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைக் காட்டித்தான் வாக்களிக்க வேண்டும்.அது இல்லாதவர்கள், ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், பாஸ்போர்ட், 31.5.2005வரை வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம், 31.5.2006 வரை வழங்கப்பட்ட ரயில்வேஅடையாள அட்டை உள்ளிட்ட 14 ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

தேர்தல் பாதுகாப்புக்கு ராணுவத்தை வரவழைக்கும் வாய்ப்பில்லை. நமது போலீஸார்தவிர பிற மாநில போலீஸாரையும் அழைக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.

வெற்றி பெற்ற உறுப்பினர்கள் 25ம் தேதி பதவியேற்பார்கள். சென்னை மாநகராட்சிமேயர் தேர்தல் 28ம் தேதி நடைபெறும். வாக்குச் சீட்டு மூலம் மறைமுமாக மேயர்தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார் சந்திரசேகரன்.

10,152 பேர் போட்டியிட தடை:

இதற்கிடையில் தேர்தலில் பேட்டியிடுபவர்கள் செலவு கணக்கு காட்டாததால் 10,152 பேர் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடுபவர்கள் எவ்வளவு செலவு செய்வது என்பது குறித்து தேர்தல் கமிஷன் வரையறுத்துள்ளது. இதன் படி கடந்த 2001ம் ஆண்டுஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஆயிரக்கணக்கானோர் தங்கள் தேர்தல் செலவு கணக்கை காட்டவில்லை. தேர்தல் கமிஷன் பல தடவை நோட்டீஸ்அனுப்பியும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

இந் நிலையில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களின் மனுக்களை அதிகாரிகள்நிராகரித்து விட்டனர். அந்த வகையில் மொத்தம் 10,152 பேர் மீண்டும் தேர்தலில் நிற்க முடியாத படி தடை விதித்துள்ளது.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக செலவு செய்யவர்கள் மீது ஊழல் தடுப்பு நடவடிக்கை எடுக்கவும், வெற்றி பெற்ற பிறகு யாராவதுகுறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் செலவு கணக்கு காட்டாவிட்டால், அவர்கள் பதவி பறிக்கப்படும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+