விமான நிலைய அவலம்: விசாரணைக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நடிகர் பிருத்விராஜின் மன நலம் குன்றிய 11 வயது மகனை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுத்தவிவகாரத்திற்கு மத்திய சமூக நலத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கும்உத்தரவிடப்பட்டுள்ளது.

நடிகர் பிருத்விராஜ்-பீனா தம்பதிக்கு 11 வயதில் அகத் என்ற மகன் உள்ளார். இவர் மன நலம் குன்றியவர்ஆவார். பிருத்விராஜ் தனது குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றிருந்தார். பின்னர் சென்னைக்குத்திரும்புவதற்காக பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது அவரது மகனைப் பார்த்த அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை காவலர்கள், மன நலம்குன்றிய குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் செல்லக் கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிருத்விராஜ் பாதுகாவலர்களுடன் வாக்குவாதம் செய்தார். அப்போது 1937ம்ஆண்டில் போடப்பட்ட ஒரு அறுதப் பழசான சட்டப் பிரிவை காட்டி மன நலம் குன்றியவர்களுக்கு விமானபயணம் செய்ய அனுமதி கிடையாது என்று கூறி மனிதாபிமானம் இல்லாம் பேசியுள்ளனர்.

இதையடுத்து விமான நிலையத்தில் இருந்த உயர் அதிகாரி ஒருவரின் உதவியை பிருத்விராஜ் நாடினார். ஆனால்அந்த அதிகாரியும் கையை விரித்து விட்டார். உலகில் எங்குமே இதுபோல அநியாயம் நடக்காது என்று கூறியபிருத்விராஜ் விமான நிலையத்தை விட்டு செல்லாமல் அங்கேயே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பயணம் செய்யவிருந்த விமான நிறுவனத்தின் அதிகாரிகள் விரைந்து வந்து அகத்துடன்பிருத்விராஜ் குடும்பத்தினர் விமான பயணம் செய்ய எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியதைத்தொடர்ந்து பிருத்விராஜ் குடும்பத்தை விமான நிலையத்திற்குள் அனுமதித்தனர் பாதுகாவலர்கள்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தற்போது மத்திய அரசு வரை சென்றுள்ளது. பெங்களூர் விமானநிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்கள் நடந்து கொண்ட விதம் குறித்துவிசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும் பாதுகாவலர்களின் இச்செயலுக்கு மத்திய சமூக நலத்துறையும் கண்டனம் தெரிவித்துள்ளது.அமைச்சகத்தின் ஊனமுற்றோர் பிரிவு ஆணையர் மனோஜ் குமார் இதுகுறித்துக் கூறுகையில், பாதுகாப்புப்படையினரின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டுள்ளனர்.

மாறுபட்ட மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட அவர்களிடம்இல்லாதது வருத்தம் தருகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கு விமான நிலைய அதிகாரிகள் உரியஅறிவுரைகளைத் தர வேண்டும்.

பாதிக்கப்பட்ட நடிகரின் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு உண்மை நிலையை அறியுமாறும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+