இத்தாலிய அமைச்சரை கவர்ந்த சத்தியாகிரகம்
ரோம்:
மகாத்மா காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்தால் கவரப்பட்ட இத்தாலி நாட்டுஅமைச்சர் எம்மா பொன்னினோ, மேற்காசியாவில் அமைதி நிலவ வலியுறுத்திசத்தியா கிரகப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
காந்தியடிகளின் சத்தியா கிரகப் போராட்டம் உலகுக்கு அறிமுகமாகி 100ஆண்டுகளைத் தொட்டு விட்டது. இன்றளவும் அது மிகப் பொருத்தமான ஒருஅமைதிப் போராட்டமாக திகழ்கிறது.இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்த சத்தியாகிரகம் இப்போது உலகநாடுகளையும் கவரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இத்தாலி நாட்டின் ஐரோப்பியவிவகாரத்துறை அமைச்சர் எம்மா பொன்னினோவை காந்தியடிகளின் சத்தியா கிரகம்வெகுவாக ஈர்த்துள்ளது.
இதுகுறித்து அவர் இத்தாலி எம்.பிக்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோர்அடங்கிய கூட்டத்தில் பேசுகையில், மகாத்மா காந்தி கண்டுபிடித்த சத்தியாகிரகபோராட்ட முறை என்னை வெகுவாக கவர்ந்துள்ளது.
எனது கட்சிக்கும் இந்த போராட்ட முறை பிடித்துப் போய் விட்டது. அமைதியானமுறையில் நமது எதிர்ப்பை காட்டுவது என்பது முற்றிலும் வித்தியாசமானதாகஇருக்கிறது. எதிர்ப்பு என்றாலே வன்முறை என்று உள்ள இந்தக் காலத்தில், சத்தியாகிரகத்திற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
மேற்காசியாவில் அமைதி திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி சத்தியா கிரகப்போராட்டத்தை நடத்த நான் முடிவு செய்துள்ளேன். காந்தி போதித்த அகிம்சைஉள்ளிட்ட பல்வேறு உரிய கொள்கைகளை நான் தினசரி வாழ்வில் கடைப்பிடித்துவருகிறேன். அது நல்ல பலன் தந்துள்ளது என்று கூறியுள்ளார் எம்மா.
எம்மாவின் கூற்றை அவர் சார்ந்த ரேடிகலி கட்சியும் பிரதிபலிக்கிறது. காந்தியின்போராட்ட முறைகளால் கவரப்பட்ட அக்கட்சி, தனது கொடியில் காந்தியின்உருவத்தையும் பொறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications