திமுகவினருடன் மோதல்-காளிமுத்து மைத்துனர் சாவு
மதுரை:
முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மைத்துனர் நந்தகோபால், மதுரை மாநகராட்சி 29வது வார்டில்திமுகவினருடன் ஏற்பட்ட மோதலின்போது சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.
மதுரை தெற்குவாசல் பகுதியில் நேற்று திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே பெரும் மோதல்வெடித்தது. இதில் வேட்பாளர் ராஜன் செல்லப்பாவின் கார் சேதப்படுத்தப்பட்டது.திமுகவின் தேர்தல் அலுவலகம் சூறையாடப்பட்டது. திமுக, அதிமுகவைச் சேர்ந்த பலர் காயமடைந்தனர்.
இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே கழகத்தினர் மீது ஆங்காங்கே வன்முறைத் தாக்குதல்கள்அதிகரித்து வருகின்றன.
சாதனையைச் சொல்லி ஓட்டு கேட்க முடியாது என்பதை தெரிந்து கொண்ட திமுக, ஜனநாயகத்தை நம்பாமல்பணநாயகத்தை நம்பியும், காவல்துறையைப் பயன்படுத்தியும் வன்முறையை அரங்கேற்றி வருகிறது.
மதுரை மாநிகராட்சி 29வது வார்டில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருப்பதை அறிந்த அதிமுகஅவைத் தலைவர் காளிமுத்துவின் மைத்துனரும், 29வது வார்டு கழக வேட்பாளருமான நந்தகோபால் அதைத்தடுத்து நிறுத்த முற்பட்டபோது வாக்குவாதம் மற்றும் தள்ளுள்ளு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் இறந்து விட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதைகேள்விப்பட்ட நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
நந்தகோபாலை இழந்து வாடும் காளிமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கல்களைத்தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இந் நிலையில் நேற்றைய மோதல் தொடர்பாக திமுக, அதிமுக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications