குடு குடு பாட்டி தலைவர் பதவிக்குப் போட்டி
தேனி:
84 வயதாகும் ஒரு பாட்டி, பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கியது சீப்பாலக்கோட்டை ஊராட்சி. இங்கு தலைவர்மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.இதில் தலைவர் பதவிக்கு அழகம்மாள் என்பவர் போட்டியிடுகிறார். படு தெளிவான கண் பார்வையுடன்,சுறுசுறுப்பாக இயங்கும் அழகம்மாள் இந்த தள்ளாத வயதிலும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது சுற்றுவட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனிமேல் தலைவர் ஆகி என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்போரிடம் படு போல்டாக பேசுகிறார்அழகம்மாள். பல ஆண்டுகளாகவே நான் போட்டியிட முயன்று வருகிறேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.தற்போது சுழற்சி முறையில் வாய்ப்பு வந்துள்ளது.
நான் உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறேன். வெற்றி பெற்றால் ஊராட்சியின் துணைத் தலைவர் ஆகிவிடுவேன். நான் அந்தக் காலத்து அஞ்சாப்பு (5ம் வகுப்பு). வெற்றி பெற்றால் ஆதி திராவிட மாணவ,மாணவியருக்கு விடுதி கட்டித் தர முயற்சிப்பேன். நூலகம் கொண்டு வர பாடுபடுவேன் என்கிறார்.
வயதில் பாட்டி தளர்ந்திருக்கலாம், ஆனால் அவரது நம்பிக்கை படு உறுதியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
