மதுரையில் திமுகவே வெல்லும்-கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் திமுக பெரும் வாக்கு வித்தியாசத்தில்வெற்றி பெறும் என சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள மதுரை மத்திய தொகுதியல், லயோலா கல்லூரிஊடகவியல் துறை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக் கணிப்பு நடத்தினர்.இதன் முடிவுகளை துறை பேராசிரியர் ராஜநாயகமும் கல்லூரியின் முதல்வர் ஆல்பர்ட்முத்துமாலையும் இன்று வெளியிட்டனர்.

அதன் விவரம்:

இன்றைய நிலையில் தேர்தல் நடந்தால் மதுரை மத்திய தொகுதியில் திமுகவுக்கு 51.2சதவீத வாக்குகளும், அதிமுகவுக்கு 22.6 சதவீத வாக்குகளும் கிடைக்கும்.விஜய்காந்தின் தேமுதிகவுக்கு 17.6 சதவீத வாக்குகள் கிடைக்கும்.

ஆண்களில் 47.9 சதவீதத்தினர் திமுகவுக்கும் 23.7 சதவீதத்தினர் அதிமுகவுக்கும்ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Rajanayagam and Albat Muthu Nayagam
கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடும் ராஜநாயகம்,
ஆல்பர்ட் முத்துமாலை

பெண்கள் மத்தியில் திமுகவுக்கு 55.7 சதவீத ஆதரவும், அதிமுகவுக்கு 22.4 சதவீதஆதரவும் காணப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மத்தியில் திமுகவுக்கு 54.5 சதவீத ஆதரவும், அதிமுகவுக்கு 13.6சதவீத ஆதரவும் உள்ளது.

இஸ்லாமியர்களில் 84 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவாகவும், அதிமுவுக்குஆதரவாக 4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை மத்திய தொகுதியில் உள்ள 15 மாநகராட்சி வார்டுகளில் 10 வார்டுகளில் திமுகமுன்னிலையில் உள்ளது. 5 வார்டுகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு 3வது இடமே கிடைக்கும். இருப்பினும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில்கூடுதலாக 4.8 சதவீத வாக்குகள் விஜயகாந்த் கட்சிக்குக் கிடைக்கும். கடந்த பொதுத் தேர்தலில் விஜயகாந்த் கட்சிவேட்பாளர் சுந்தரராஜன் 12.8 சதவீத ஓட்டுக்களைப் பெற்றிருந்தார்.

கடந்த தேர்தலில் திமுக 45.8 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இப்போது 5.4 சதவீத வாக்குகள் கூடுதலாககிடைக்கும். அதிமுக கடந்த தேர்தலில் 38.2 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. அதில் 15.6 சதவீத வாக்குகள்குறைகிறது.

விஜயகாந்த் கட்சிக்கு கூடுதல் ஓட்டுக்கள் கிடைப்பது பெரும்பாலும் அதிமுகவிலிருந்து பிரிந்து வரும்ஓட்டுக்களாக இருக்கக் கூடும் என கருத்துக் கணிப்பு கூறுகிறது.

உள்ளாட்சித் தேர்தல்: திமுக முன்னிலை

அதே போல உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியே பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும் எனவும்லயோலா கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பொதுப் பிரிவிலிருந்து தனி பிரிவுக்கு மாற்றப்பட்ட பஞ்சாயத்துக்களில் 25 கிராமங்களில் கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது. திமுக அரசு மீது விலை வாசி உயர்வு, சிக்குன்குனியா பிரச்சினை உள்ளிட்ட சில குறைகள்இருந்தாலும் கூட அரசின் நலத் திட்டங்கள் கிராம மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. எனவேகிராமங்களில் திமுகவுக்கு எதிர்ப்பு அலை இல்லை.

அதேசமயம், கிராம அளவில் அதிமுக இன்னும் வலுவுடனேயே உள்ளது தெரிய வந்துள்ளது. பல இடங்களில்பிற கட்சிகளை விட அதிமுகவுக்கு நல்ல ஆதரவு காணப்படுகிறது.

விஜயகாந்த் கட்சிக்கு சில கிராமங்களில்தான் கணிசமான ஆதரவு உள்ளது. ஆனால் பல இடங்களில் சொற்பஎண்ணிக்கையில்தான் ஆதரவாளர்கள் உள்ளனர்.

பொது பட்டியலில் இருந்து தனி பட்டியலுக்கு பஞ்சாயத்துக்களை மாற்றியதற்கு பரவலாக மக்களிடையே எதிர்ப்புநிலவுகிறது. அரசும், அதிகாரிகளும் வேண்டும் என்றே சாதிப் பிரச்சினையை திணிப்பதாக அவர்கள்கருதுகிறார்கள். கீரிப்பட்டியில், பெரும்பான்மை இனத்தவரிடையே கட்சிரீதியாக பிளவு காணப்படுகிறது.

பாப்பாபட்டி, நாட்டாமங்கலம் ஆகிய கிராமங்களிலும் பெரும்பான்மை ஜாதியினர் தங்கள் விருப்பத்திற்கு எதிராகதேர்தலை அரசு வலுக்கட்டாயமாக திணிப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்குன்குனியா பரவல் உறுதியானது:

அதே போல தமிழகத்தின் பல பகுதிகளில் சிக்குன்குனியா பரவியிருப்பதும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது.தமிழக அரசு இந்த விஷயத்தில் உரிய அக்கறை காட்டவில்லை, கூடுதலாக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிக்கே முதலிடம்:

மக்களின் மனம் கவர்ந்த நடிகராக இன்னும் ரஜினிதான் உள்ளார். அவரைத்தான் தங்களது மனம் கவர்ந்தநடிகராக 16.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த்துக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.

செப்டம்பர் மாதம் 28ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இவ்வாறு ராஜநாயகம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+