ஓட்டுக்கு பணம்-கரன்சிகளுடன் அதிமுகவினர் கைது
மதுரை:
மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக முன்னாள் எம்பி முத்துமணி, முன்னாள் எம்எல்ஏராஜாங்கம் உள்ளிட்ட ஏராளமானோரை போலீசார் பணக் கட்டுகளுடன் பிடித்து கைது செய்தனர்.
முன்னாள் எம்பி ஜக்கையன் தலைமறைவாகிவிட்டார். அதிமுக பொதுச் செயலாளர் மதுரையில் முகாமிட்டுள்ளநிலையில் அதிமுகவினர் பிடிபட்டுள்ளனர்.மதுரை பெருமாள் கோவில் அருகே ஆர்த்தி ஹோட்டலில் அதிமுகவினர் 4 அறைகளை வாடகைக்கு எடுத்துஅங்கு வைத்து வாக்காளர்களுக்கு பணம் வழங்க கட்சி நிர்வாகிகளிடம் பண பட்டுவாடா செய்தனர்.
இது குறித்து திமுகவினர் போலீசாருக்கு தகவல் தந்தனர். இதையடுத்து உதவி ஆணையர் குமரவேலுதலைமையிலான போலீசார் ஆர்த்தி ஹோட்டலின் 4 அறைகளையும் முற்றுகையிட்டனர்.
அப்போது கட்டுகளைப் பிரித்து பணம் வினியோகித்துக் கொண்டிருந்த அதிமுக முன்னாள் எம்பி முத்துமணி,முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராஜாங்கம், அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன்உள்ளிட்ட 15 பேரை போலீசார் பிடித்தனர்.
அவர்களிடமிருந்து 1.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல வாக்காளர்களுக்கு தருவதற்காக அதிமுகவினருக்கு பணம் வினியோகித்த காரைக்குடியைச் சேர்ந்தகாண்ட்ராக்டர் சுப்பிரமணியம் என்பவரும் பிடிபட்டார். அவரது காரிலிருந்து ரூ. 4 லட்சம் பறிமுதல்செய்யப்பட்டது.
தெற்குமாசி வீதி எம்ஜிஆர் சிலையருகே வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏரத்தினவேலும் பிடிபட்டார். அவரிடம் இருந்து ரூ. 33,000 பறிமுதல் செய்யப்பட்டது.
இதைக் கைதுகளைத் தொடர்ந்து அதிமுகவினர் எம்பி கோகுல இந்திரா தலைமையில் திலகர் திடல் காவல்நிலையத்தில் நுழைந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். காவல் நிலையத்துக்குள் அதிமுகவினர்ரகளையில் இறங்கியதால் போலீசார் தடியடி நடத்தினர்.
இந் நிலையில் பணம் தந்து பட்டுவாடா செய்யச் சொன்ன ஜக்கையன் உள்ளிட்டோர் தலைமைவாகிவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications