கலவரம்: மங்களூரில் தொடர்ந்து பதட்டம்
மங்களூர்:
கர்நாடக மாநிலம் மங்களூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருவதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் குதர்படவு என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு வழிபாட்டுத் தலம் மீது சிலவிஷமிகள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த வழிபாட்டுத் தலம் லேசாக சேதமடைந்தது. மேலும்,வழிபாட்டுத் தலத்தில் இருந்த 25 வயது வாலிபர் தாக்குதல் கும்பலின் கடும் தாக்குதலுக்கு பலியானார்.இதனால் அங்கு வன்முறை மற்றும் கலவரம் மூண்டது. வழிபாட்டுத் தலம் தாக்கப்பட்டு, ஒருவர்கொல்லப்பட்டதால், அந்த சமூகத்தைசத் சேர்ந்தவர்கள் மறு தரப்பினர் மீது தாக்குதலை தொடங்கினர். இதனால்மங்களூர் நகரில் பெரும் கலவரம் மூண்டது.
உல்லல், கொனேஜே உள்ளிட்ட பகுதிகளில் இரு தரப்பினரைச் சேர்ந்தவர்களும் கடும் மோதலில் இறங்கினர்.இதனால் மங்களூர் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது. கலவரத்தைத் தடுக்க போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
பல இடங்களில் மோதல் நடந்ததால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும்கும்பலை அடித்து விரட்டினர். இருப்பினும் கலவரம் தொடர்ந்தபடி இருந்ததால் ஊரடங்கு உத்தரவுஅமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தில் ஈடுபட்ட 180 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அடூர்-பொலாலி சாலையில் ஒருஆம்புலன்ஸை வன்முறைக் கும்பல் தடுத்து நிறுத்தி ஆம்புலன்ஸுக்குத் தீவைத்துது. அதில் இருந்தவர்களும்தாக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் 36 வயது மதிப்புடைய ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் 5 பேர்காயமடைந்தனர்.
கலவரத்திற்கு சிமி அமைப்பும், பஜ்ரங் தளமும் தான் காரணம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். கலவரம்மேலும் பரவாமல் தடுத்த போலீஸார் அதிக அளவில் மங்களூரில் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய மத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications