சத்தியாகிரக விழா: தெ.ஆ. அதிபர் வருத்தம்!
டர்பன்:
தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்த சத்தியாகிரக நூற்றாண்டு விழாவுக்கு அதிக அளவிலான மக்கள் கலந்துகொள்ளாததன் மூலம், தென்னாப்பிரிக்க மக்களுக்கும், நாட்டுக்கும் களங்கம் ஏற்பட்டு விட்டதாக அந்நாட்டுஅதிபர் மெபகி கூறியுள்ளார்.
மகாத்மா காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில்தான் சத்தியாகிரக போராட்டத்தைத் தொடங்கினார். அதுதொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆவதையொட்டி சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் பிரமாண்ட விழாவுக்குஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 150 பேர் மட்டுமே இந்த விழாவுக்கு வந்திருந்தனர்.இதுகுறித்து தென்னாப்பிரிக்க அதிபர் மெபகி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தென்னாப்பிரிக்க மக்களுக்குபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் இணைய தளத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில்தெரிவித்துள்ளதாவது: அக்டோபர் 1ம் தேதி சகாரா கிங்க்ஸ்மெட் விளையாட்டரங்கில் நடந்த சத்தியாகிரகநூற்றாண்டு விழாவிற்கு, நமது சகோதர நாடான இந்தியாவின் பிரதமர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த விழாவின்போது விளையாட்டரங்கமே காலியாக இருந்தது போல காணப்பட்டது. திரளான மக்கள் இந்தவிழாவுக்கு வராமல் போனது குறித்து நான் அதிர்ச்சி அடைந்தேன். வரலாற்றில் நீண்ட காலத்துக்கு நமது மக்கள்ஏற்பட்ட இந்த கரும்புள்ளி மறையாமல் பெரும் களங்கமாக இருக்கும்.
1906ம் ஆண்டு காந்தியடிகள், பிக்ஸ்லே, ஜான் லங்காலிபலேலே போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்டசத்தியாகிரக இயக்கம் 100 வருட பழமை வாய்ந்தது என்று கூறியுள்ளார் மெபகி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications