தாய் பாம்பாட்டியின் பச்சக் சாதனை!
பட்டயா:
தாய்லாந்தில் 19 கொடிய விஷம் கொண்ட ராஜ நாகப் பாம்புகளுக்கு அடுத்தடுத்து முத்தம் கொடுத்து புதியகின்னஸ் சாதனை படைத்துள்ளார் 45 வயதான தாய்லாந்து பாம்பாட்டி.
தாய்லாந்தின் பட்டயா என்ற நகரில் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற அருங்காட்சியகம் உள்ளது.இங்குதான் இந்த முத்த சாதனை நடைபெற்றது. கும் சய்புத்தி என்ற 45 வயது பாம்பாட்டி, கொடிய விஷம்கொண்ட 19 ராஜ நாகங்களுக்கு அடுத்தடுத்து முத்தம் கொடுத்து புதிய உலக சாதனை படைக்க போவதாகஅறிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து அங்கு பெரும் கூட்டம் கூடியது. தனி மேடையில் ராஜ நாகங்கள் அடங்கிய பெட்டிகளுடன் களம்இறங்கினார் சய்புத்தி. சய்புத்தி தவிர மேலும் நான்கு பாம்பாட்டிகள், ஒரு மருத்துவர் உள்ளிட்டோர் அங்குஇருந்தனர்.
ஒவ்வொரு பாம்பாக பெட்டியிலிருந்து வெளியே எடுத்து விடப்பட்டது. அந்த பாம்பினை தாஜா செய்து அதன்வாயில் முத்தமிட்டார் சய்புத்தி. அவர் ஒவ்வொரு பாம்புக்கும் முத்தமிடும்போது பார்வையாளர்கள் கரகோஷம்செய்து பாராட்டினர். இப்படியாக 19 பாம்புகளுக்கும் முத்தமிட்டு சாதனை படைத்தார் சய்புத்தி.
கடும் விஷம் கொண்ட ராஜ நாகங்களை படு அனாயசமாக சய்புத்தி முத்தமிட்டது பார்வையாளர்களை ஜில்லிடவைத்தது. 19வது நாகத்தை அவர் முத்தமிட்டு முடித்தபோது அரங்கமே கைத்தட்டல் ஒலியால் அதிர்ந்தது.
இந்த சாதனை மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 1999ம் ஆண்டு 11 கொடிய விஷம் கொண்டபாம்புகளுக்கு முத்தமிட்டு படைத்திருந்த கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications