மீண்டும் கேப்டன் ஆனார் யூனிஸ் கான்
கராச்சி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மீண்டும் யூனிஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாககேப்டனாக அறிவிக்கப்பட்ட முகம்மது யூசப், துணை கேப்டனாக மாற்றப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் இன்சமாம் உல் ஹக் 4 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடதடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி மினி உலகக் கோப்பைப்போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணிக்கு யூனிஸ் கானை முதலில் கேப்டனாக நியமித்தது பாக். கிரிக்கெட்வாரியம்.ஆனால் டம்மி கேப்டனாக இருக்க நான் விரும்பவில்லை. எனவே கேப்டனாக இருக்க முடியாது என்றுஅறிவித்த யூனிஸ் கான், வாரியக் கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கேப்டனாக முகம்மது யூசப் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், யூனிஸ் கான் விவகாரம்தொடர்பாக வாரியத் தலைவர் ஷகாரியார் கான் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவராக நஸீம்அஷ்ரப் நியமிக்கப்பட்டார்.
அஷ்ரப் பதவிக்கு வந்ததுமே திடீர் திருப்பமாக யூசுப் மாற்றப்பட்டு மீண்டும் யூனிஸ்கானே கேப்டனாகஅறிவிக்கப்பட்டார். யூசுப் துணை கேப்டனாக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குக் கிளம்புவதற்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியானது. கேப்டன் பதவியைஏற்றுக் கொள்வதாக யூனிஸ்கான் சம்மதம் தெரிவித்துள்ளார். அதேபோல முகம்மது யூசுப்பும் துணை கேப்டனாகசெயல்பட ஒப்புதல் அளித்துள்ளார் என்று அஷ்ரப் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications