சிறந்த பஞ்சாயத்து தலைவர்கள் கங்குலி, இன்ஸி!
சிட்னி:
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை சர்ச்சைகள் மற்றும் புகார்களில் சிக்கியவர்கள் என்ற பெருமைஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி மற்றும் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்குக்கிடைத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மோசமாக நடந்து கொண்ட அணிகள், அதிக முறை புகார்களுக்கு ஆளானவீரர்கள், அணிகள் என ஒரு பட்டியலை சிட்னியிலிருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் நாளிதழ்வெளியிட்டுள்ளது.இதில் அதிக முறை புகார்களுக்கு ஆளான வீரர்கள் என்ற பெயர் கங்குலிக்கும், இன்சமாக்கும் கிடைத்துள்ளது.இருவரும் தலா 12 முறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அடுத்த இடம் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்குக் கிடைத்துள்ளது. அவர் குறித்து 7முறை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கங்குலியும், இன்சமமாம் தான் அந்தந்த நாடுகளின்அணிகளுக்கு அதிக வெற்றிகளைத் தேடிக் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அணி வரிசையில் பாகிஸ்தானுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அந்தப் பிரச்சினைதொடர்பாக மொத்தம் 53 முறை பாகிஸ்தான் சிக்கியுள்ளது. 2வது இடம், வேறு யாருக்கு.? இந்தியாவுக்குத்தான்.மொத்தம் 44 முறை இந்திய அணி ஒழுங்கீனம் தொடர்பான புகாருக்கு ஆளாகியுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி 41 முறையும், ஆஸ்திரேலிய அணி 38 முறையும் புகார் செய்யப்பட்டுள்ளன.
பெரிய அளவில் சர்ச்சையில் சிக்காத அணியாக மேற்கிந்திய தீவுகள் அணி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகுறித்து இதுவரை மொத்தமே 13 புகார்கள்தான் கூறப்பட்டுள்ளன. அணியின் கேப்டன் பிரையன் லாரா சிறந்தஒழுக்கமான வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீது இதுவரை பெரிய அளவில் எந்தப் புகாரும்கூறப்படவில்லையாம்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புள்ளிவிவரங்களை சுட்டிக் காட்டி இந்த பட்டியலை வெளியிட்டுள்ளதுடெலிகிராப்.
அதிக முறை சர்ச்சைக்குள்ளான அம்பயர்கள் குறித்த பட்டியலையும் டெலிகிராப் வெளியிட்டிருந்தால் நன்றாகஇருந்திருக்கும். ஆனால் அதில் ஆஸ்திரேலியர்கள்தான் முதலிடம் பெறுவார்கள் என்பதால் விட்டு விட்டார்கள்போலும்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications