திமுக ஆட்சியில் ஏறிப் போச்சு விலைவாசி: ஜெ.
திருநெல்வேலி:
திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
நெல்லையில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதாபேசுகையில், கடந்த ஆட்சியில் மத்திய அரசு 6 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. ஆனால் எனதுதலைமையிலான அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. விலைவாசியை ஏற்றவில்லை.தற்போது சர்வதேச சந்தையில், கச்சா எண்ணையின் விலை குறைந்து வருகிறது. இப்போது ஏன் பெட்ரோல், டீசல்விலையை குறைக்கவில்லை? ஏன் குறைக்க முடியாதா?
எனது ஆட்சியில் விலை வாசி உயர்வை சீராக வைத்திருந்தோம். ஆனால் இப்போது திமுக ஆட்சியில்விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. எனது ஆட்சியில் ஒரு கிலோ மஞ்சள் ரூ. 28க்கு விற்றது, திமுகஆட்சியில் ரூ. 50க்கு விற்கிறது.
அதிமுக ஆட்சியில் ஒரு கிலோ புளி 25க்கு விற்றது, இப்போது ரூ. 50. ஒரு கிலோ பூண்டு ரூ. 50க்கு விற்றது,இப்போது ரூ. 75. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 28. இப்போது, ரூ. 52. ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ரூ.25.இப்போது ரூ. 65.
கடலைப்பருப்பு ரூ. 18, இப்போது ரூ. 45. பாசிப் பருப்பு ரூ. 26, இப்போது ரூ. 55. மைதா கிலோ ரூ.12.இப்போது ரூ. 28. கோதுமை கிலோ ரூ. 12, இப்போது ரூ. 20.
இதுமட்டுமா, கட்டுமானப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இப்படியே போனால்கட்டுமானப் பணியே ஸ்தம்பித்துப் போய் விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் 3 யூனிட் மணல் ரூ. 1,500 முதல் ரூ. 3,000 வரை விற்றது. இப்போது ரூ. 3,000 முதல்ரூ.6,000 ஆக உயர்ந்து விட்டது. திமுக ஆட்சிக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
எனது ஆட்சியில் பல கோப்புகளை நான் கையெழுத்திடாமல் போய் விட்டதாக கூறுகிறார் கருணாநிதி.என்னிடம், நீங்கள் சிறந்த முதல்வர், இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலம் என பாராட்டியவர் பிரதமர்மன்மோகன் சிங்.
அப்படிப்பட்ட என்னைப் பார்த்து கோப்புகளில் நான் கையெழுத்திடவில்லை என்கிறார் கருணாநிதி. கடந்த ஐந்துஆண்டுகளில் கிட்டத்தட்ட 60,000 கோப்புகளைப் பார்த்து கையெழுத்திட்டுள்ளேன்.
2001ல் நான் முதல்வராக பதவியேற்றபோது, கருணாநிதி 5,000 கோப்புகளில் கையெழுத்திடாமல் போய்விட்டார். நாகரீகம் கருதி அதை நான் வெளியே சொல்லவில்லை என்றார் ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications