பிரதமர் போகும் சாலையில் ஜல்லிக்கட்டு!
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங் செல்லும் சாலையில் புகுந்த காளை மாட்டைப் பிடிக்க பாதுகாலர்கள் கடும் போராட்டம்நடத்தி, கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்குப் பின்னர் மயக்க ஊசி போட்டு மாட்டைப் பிடித்தனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
பிரமதர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லம் உள்ள சப்தர்ஜங் சாலையிலிருந்து சற்று தொலைவில் உள்ளமகாதேவ் சாலை. இது பிரதமர் அடிக்கடி செல்லும் சாலை என்பதால் அங்கு எப்போதுமே பலத்த பாதுகாப்புஇருக்கும்.நேற்று காலை 9.30 மணிக்கு மந்திர் மார்க் என்ற இடத்திலிருந்து ஒரு காளை மாடு, மகாதேவ் சாலையில்நுழைந்தது. இதைப் பார்த்த பிரதமரின் பாதுகாவலர்கள் பதட்டமடைந்தனர். பிரதமர் வரும் நேரமாக பார்த்துமாடு வந்து விட்டதால் அவர்கள் பரபரப்படைந்தனர்.
உடனடியாக சில காவலர்கள், மாட்டைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அது முரட்டுக் காளை மாடு என்பதால்எளிதில் அவர்களிடம் சிக்காமல் டேக்கா காட்டியது. மேலும் சில காவலர்கள் சேர்ந்து கொண்டு காளை மாட்டைப்பிடிக்க முயன்றபோது அது குஷியாக ஓடத் தொடங்கியது.
மகாதேவ் சாலையிலிருந்து ஓடத் தொடங்கிய காளை மாடு, கன்னாட் பிளேஸ், கோல் மார்க்கெட் என ஒவ்வொருபகுதியாக ஓடத் தொடங்கியது. மாட்டைப் பிடிக்க காவலர்களும், பொதுமக்கள் சிலரும் கூடவே ஓடியதால்அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போல அந்தக் காட்சி தோற்றமளித்தது.
காளை மாடு தறி கெட்டு ஓடிவருவதைப் பார்த்த சாலையில் போனவர்கள் அதிர்ச்சியடைந்து தெறித்து ஓடினர்.இப்படியாக ஓடிய மாடு, கடைசியில் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை அருகே போய் நின்றது.
புஸ் புஸ் என்று மூச்சு விட்டபடி நின்ற மாடு அதற்கு மேல் எங்கே போவது என்று தெரியாமல் முழித்தது.அதேசமயம், தன்னை நெருங்க முயன்ற பாதுகாவலர்களையும் அது அருகே வர விடாமல் கொம்புகளை ஆட்டிஆட்டி பயறுத்தியது.
மாட்டை எப்படிப் பிடிப்பது என்று யோசித்துப் பார்த்த பாதுகாவலர்களுக்கு கண்ணுக்கு எதிரே தெரிந்தலோஹியா மருத்துவமனையைப் பார்த்ததும் ஒரு ஐடியா வந்தது. சில காவலர்கள் மருத்துவமனைக்குச் சென்றுமாட்டைப் பிடிக்க மயக்க மருந்து தந்து உதவுமாறு கோரினர்.
இதையடுத்து மருத்துவனையிலிருந்து சில ஊழியர்கள் மயக்க மருந்துடன் வந்தனர். அதை துப்பாக்கி முலம்மாட்டின் மீது ஏவவே, சில நிமிடங்களில் மாடு மயக்கமடைந்து பொத்தென்று படுத்து விட்டது.
இதையடுத்து மாட்டை நெருங்கிய பாதுகாவலர்கள் அதை அடக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன்மூலம் 6 மணி நேரமாக நடந்த ஜல்லிக்கட்டு முடிவுக்கு வந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications