ராமதாஸ்-திருமாவளவன் சந்திப்பு!
சென்னை:
டாக்டர் ராமதாஸுடன் இணைந்து தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை மீண்டும் புதுப் பொலிவுடன், வலுவுடன் நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
எதிரும், புதிருமாக இருந்து வந்த ராமதாஸும், திருமாவளவனும், தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு சிலமாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்தனர். தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் கீழ் இருவரும்ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் இடம் கிடைக்காதசூழ்நிலை ஏற்பட்டதால் அவர் ராமதாஸிடமிருந்து பிரிந்தார். அதிமுக கூட்டணியில் இணைந்தார். இருஎம்எல்ஏக்களையும் பெற்றார்.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருப்திகரமான இடங்கள் கிடைக்காததால்அங்கிருந்து வெளியேறி திமுக கூட்டணியில் இணைந்தார். தற்போது திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று பாமக நிறுவனர் ராமதாஸை, திருமாவளவன் சந்தித்தார். அவரை ராமதாஸ் கட்டித் தழுவிவரவேற்றார். பின்னர் இருவரும் தனிமையில் அரை மணி நேரம் பேசினர்.
அதன் பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இனம் இனத்தோடு சேர்ந்துள்ளது என்று திருமா,திமுக கூட்டணிக்கு வந்தது குறித்து கலைஞர் கூறியிருந்தார். பாட்டாளி வர்க்கம், உழைப்பாளிகள் வர்க்கம் ஒன்றுசேர்ந்துள்ளன.
தமிழ் பாதுகாப்பு இயக்கம் மூலம் தேர்தலுக்கு முன்பு நாங்கள் இணைந்தோம். இடையில் சிறிது காலம்பிரிந்திருந்தோம். இப்போது மீண்டும் சேர்ந்துள்ளோம். பலமாகவே இணைந்துள்ளோம்.
தமிழ் நாட்டுக்காகவும், தமிழ் மக்கள் நலனுக்காகவும் இருவரும் இணைந்து செயல்படுவோம். திருமா. வருவார்என்று நான் எதிர்பார்த்தேன். அதேபோல வந்து விட்டார்.
தமிழ் பாதுகாப்பு இயக்கம் மீண்டும் புதுப் பொலிவுடன், முன்பை விட வலுவுடன் செயல்படும் என்றார்.
திருமாவளவன் கூறுகையில், மரியாதை நிமித்தமாக ராமதாஸை சந்திக்க வந்தேன். கூட்டணியின் வெற்றிக்காகபாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தீவிரமாக பிரசாரம் செய்யும்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் டாக்டர் ராமதாஸ் எனக்கு அழைப்பு விடுத்தார். அவரது ஆசை 6மாதங்களுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது என்றார் திருமாவளவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications