தினமும் ஒருவருக்காவது உதவுவோம்-பிரேமலதா
திருச்சி:
திமுக அரசு கொடுக்கும் ரூ. 2க்கு ஒரு கிலோ அரிசியை வேக வைக்கவும் முடியாது, வறுத்து சாப்பிடவும்முடியாது என விஜய்காந்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
திருச்சியில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் நிருபர்களிடம் கூறியதாவது,தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் கட்சி ஏதோ சாதித்து விட்டதாக விழா எடுக்கிறார்கள். சாதனைஎன்பதை மற்றவர்கள் கூற வேண்டும். தனக்கு தானே கூறக்கூடாது. பிறரையும் சொல்ல வைக்கக் கூடாது.
இரண்டு ரூபாய்க்கு அவர்கள் கொடுக்கும் அரிசியை வைத்துக்கொண்டு பெண்கள் படும்பாடு எனக்கு தெரியும்.அந்த அரிசியை வேக வைக்கவும் முடியாது, வறுத்து சாப்பிடவும் முடியாது. அதை வேக வைக்க ரூ. 6க்கு விறகுவாங்க வேண்டிய நிலை உள்ளது.
அடிப்படை வசதி, சுகாதாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். விதவிதமான நோய் வந்து மக்கள்சாகிறார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் இதை கண்டுகொள்வதே இல்லை. இதனால் தான் கேப்டன் மக்களைசந்தித்து கேள்வி கேட்டு வருகிறார். மக்கள் தான் இதற்கு ஒரு தீர்ப்பு வழங்க வேண்டும். மக்கள் விழிப்புணர்வுஅடைய வேண்டும்.
இனியும் மக்கள் ஏமாறக்கூடாது. எங்கள் கட்சியில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் அந்த விழிப்புணர்வைஏற்படுத்துவார்கள். அவர்கள் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க வாய்ப்பு கேட்டு மக்களிடம் நிற்கிறார்கள்.வாய்ப்பு கிடைத்த எங்கள் பிரிதிநிதிகள் உள்ளாட்சியில் பங்கொடுக்கும்போது தவறு செய்கிறவன் மக்கள் முன்புநிறுத்தப்படுவான்.
எங்கள் தொண்டர்கள் தினமும் ஒரு உதவியை ஒருவருக்கு செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார்கள்.லஞ்சம், ஊழல் நோய், பிச்சைக்காரர்கள், இல்லாத நாடாக நமது மாநிலத்தை மாற்ற தேமுதிக செயல்பட்டுவருகிறது.
பெண்களுக்கு அதிக இடஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தலில் களத்தில் இறங்கியுள்ளனர். பெண்களின்ஆதரவு தேமுதிகவுக்கு வெற்றியை தேடித்தரும். அமைதியான முறையில் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும்வகையில் ஒரு சமூக புரட்சியை தேமுதிக ஏற்படுத்தி வருகிறது என்பது போகப்போக புரியும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications