திமுக மகத்தான வெற்றி பெறும்: கருணாநிதி
கோவை:
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றியைப் பெறும் என்று முதல்வர்கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவையில் பிரசாரம் செய்வதற்காக இன்று காலை கருணாநிதி அங்கு சென்றார். ரயில் நிலையத்தில் அவருக்குதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,தனது ஆட்சிக்காலத்தில் 60,000 கோப்புகளை பார்த்து கையெழுத்திட்டதாக ஜெயலலிதா கூறுவது சரியல்ல.அவரது ஆட்சிக்காலத்தில் 20,049 கோப்புகள் மட்டுமே அவருக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 1,112கோப்புகளில் அவர் கையெழுத்திடவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பெரும்பாலான இடங்களில்,பெரும்பாலான மாநகராட்சிகளில், நகராட்சிகளில், ஒன்றியங்களில், மாவட்ட ஒன்றியங்களில் மகத்தானவெற்றியைப் பெறும்.
காவல்துறை அதிகாரிகளை ஜெயலலிதா மிரட்டியுள்ளார். மிரட்டுவது என்பது அவருக்கு சகஜமான விஷயம்.மதுரை காவல்துறை ஆணையர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
அது ஒரு மாறுதல் தான். அவ்வப்போது தனக்கு வரும் புகார்கள், கோரிக்கைகளின் பேரில் தேர்தல் ஆணையம்இதுபோல செயல்படுவது புதிததல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும் பல அதிகாரிகள் இதுபோல மாற்றப்பட்டுள்ளனர்என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications