5 பேரை எரிக்க முயற்சி: 80 குடிசைகள் சேதம்
சென்னை:
சென்னை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை தீவைத்து எரிக்க நடந்த முயற்சியில் 87 குடிசைகள் எரிந்துசாம்பலாயின. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
சென்னை அருகே திருவொற்றியூரை அடுத்தள்ளது திருச்சினாங்குப்பம். கடலோர மீனவர் கிராமமான இங்குபுதுநகர் என்ற மீனவக் குப்பம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகளில் வசித்துவருகின்றனர்.அப்பகுதியைச் சேர்ந்தவர் வீரம்மாள். கணவரை இழந்த அவர் தனது தாயார் நாகம்மாள், குழந்தைகள் திலகா,பிச்சாண்டி, தினேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவைத் தாண்டி, 2 பேர் வீரம்மாள் வீட்டுக்கு வந்தனர். குடிசை வீட்டின் கதவை வெளிப்புறமாகபூட்டினர். யாராலும் கதவை உடைத்துக் கொண்டு வர முடியாத அளவுக்கு கயிறுகளால் குடிசையைக் கட்டினர்.பின்னர் மண்ணெண்ணை ஊற்றி குடிசைக்கு தீ வைத்தனர்.
தூங்கிக் கொண்டிருந்த வீரம்மாள் கருகல் வாசனையை உணர்ந்து விழித்தெழுந்தார். அப்போது குடிசை தீப்பிடித்துஎரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து தாயாரை எழுப்பினார். குழந்தைகளை அவரால் எழுப்ப முடியவில்லை.அவரது அலறல் சப்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து குடிசைக் கதவை உடைத்து ஐந்துபேரையும் பத்திரமாக மீட்டனர்.
இந்த நிலையில் வீரம்மாள் வீட்டிற்கு வைக்கப்பட்ட தீ பக்கத்து குடிசைகளுக்கும் பரவியது. அப்பகுதியினர் தீயைஅணைக்க கடுமையாக போராடினர். தீயணைப்புப் படைக்கும் தகவல் தரப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. அதற்குள் 87 குடிசைகள் தீயில் கருகி விட்டன. வீரம்மாள்வீட்டில் இருந்த ரூ. 50,000 ரொக்கம், 10 பவுன் நகைகளும் தீயில் கருகி விட்டன. மொத்தமாக ரூ.10 லட்சம்அளவுக்கு இந்த தீவிபத்தால் சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
வீரம்மாளை குடும்பத்தோடு கொளுத்த முயன்றவர்கள் யார் என்பது தெரியவில்லை. தீவிபத்தால்நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு நடுத் தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும்மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரன்வீர் பிரசாத், அதிகாரிகள்விரைந்து வந்தனர்.
வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதலும், நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications