சென்னை: பெண் என்ஜீனியர் மானபங்கம்
சென்னை:
சென்னையில் ஷேர் ஆட்டோவில் சென்ற பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டார்.
சென்னை பெருங்குடி அருகே உள்ள துரைப்பாக்கத்தில் பிரபல சாப்ட்வேர் நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றிவரும் பெண் சாப்ட்வேர் என்ஜீனியர், சில நாட்களுக்கு முன்பு பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது மழைபெய்யத் தொடங்கியதால் ஷேர் ஆட்டோவில் ஏறினார்.ஷேர் ஆட்டோ டிரைவர் அருகே ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். ஷேர் ஆட்டோவில் ஏறிய அந்த என்ஜீனியர்,வேளச்சேரி செல்லுமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். ஆனால் ஆட்டோ வேளச்சேரிக்குச் செல்லாமல், வேறுபக்கமாக டிரைவர் ஆட்டோவைத் திருப்பினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், தனது செல்போன் மூலம் நண்பர்களுக்குத் தகவல் கொடுத்தார்.ஆட்டோ டிரைவரையும் ஆட்டோவை நிறுத்துமாறு கூறி சத்தம் போட்டார்.
அப்போது டிரைவருக்கு அருகில் இருந்த நபர், பின் இருக்கைக்குத் தாவி வந்து அப்பெண்ணிடம் ஆபாசமாகபேசி மானபங்க முயற்சியில் இறங்கினான். இந்த நிலையில் காரம்பாக்கம் அருகே வந்தவுடன்மானபங்கப்படுத்திய அந்தப் பெண் என்ஜீனியரை அங்குள்ள பொறியியல் கல்லூரி அருகே கீழே தள்ளி விட்டுவிட்டு அந்த ரவுடி வாலிபர்கள் மறைந்து விட்டனர்.
மயங்கிய நிலையில் கிடந்த அப்பெண்ணை போலீஸார் மீட்டனர். வேளச்சேரி மருத்துவனையில் அவர் தற்போதுஅனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்த நகைகள், வைத்திருந்த பணம் ஆகியவற்றையும் அந்த சமூகவிரோதிகள் திருடிச் சென்று விட்டனர்.
சாப்ட்வேர் என்ஜீனியரை மானபங்கப்படுத்திய அந்த இருவரையும் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துதேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications