3 லட்சம் பேருக்கு வேலை: கருணாநிதி
கோவை:
தமிழகத்தில் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர்கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கோவையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் முதல்வர்கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடனேயே 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரதிட்டமிடப்பட்டுள்ளது. வருகிற மாதங்களில் படிப்படியாக இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.
மக்கள் நிலத் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்த பின்னரே திமுக அரசுமுடிவுகளை எடுக்கும். மாநில பட்ஜெட் குறித்து கூட கூட்டணிக் கட்சிகளுடன் நாங்கள் ஆலோசித்தோம்.
கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசின் சாதனைகளை தமிழக மக்கள் அனுபவித்து வருகிறார்கள். அதேபோலகடந்த ஐந்து மாதமாக மாநில அரசின் சாதனைகளை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
ஒரு பந்தியில் மத்திய அரசு என்பது சாம்பார் போன்றது, மாநில அரசு தயிர் சாதம் போன்றது. அதேபோலஉள்ளாட்சி அமைப்புகள் என்பது சிறிது காரசாரம் சேர்க்க வேண்டும் என்பதற்காக துவையல் போன்றது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள்முறையாக மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்புகள் அதிக அதிகாரம்கொண்டவையாக இருக்க வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications