மதுரை: ஓட்டுப் பதிவு குறைவு: கட்சிகள் கலக்கம்
மதுரை:
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் பொதுத் தேர்தலை விட வாக்குப் பதிவு விகிதம்குறைந்திருப்பதால் அரசியல் கட்சிகளிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மத்திய தொகுதிக்கு நேற்று இடைத் தேர்தல் நடந்தது. திமுக சார்பில் கெளஸ் பாட்ஷா, அதிமுக சார்பில்ராஜன் செல்லப்பா, தேமுதிக சார்பில் பன்னீர் செல்வம் உள்ளிட்ட 19 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த இடைத்தேர்தல் மிக பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.தமிழகத்திலேயே முதல் முறையாக இங்கு புகைப்பட வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்பட்டது. வாக்குப் பதிவுகுறித்த முழு விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி கடந்த பொதுத் தேர்தலை விட (69.7%)இடைத் தேர்தலில் ஒரு சதவீத வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளன.
இடைத் தேர்தலில் 68.72 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன. மொத்தம் 90,887 வாக்குகள் பதிவாகியுள்ளன.இவர்களில் ஆண்கள் 46,207 பேர், பெண்கள் 44, 680 ஆகும். ஆண்களே அதிகம் வாக்களித்துள்ளனர்.
கடந்த தேர்தலை விட இம்முறை 3337 வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது. வாக்குப் பதிவு குறைந்துள்ளதால்அரசியல் கட்சிகளிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. யார் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் வெற்றிவித்தியாசம் மிகக் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
விஜயகாந்த் கட்சியின் வேட்பாளருக்கு கடந்த பொதுத் தேர்தலை விட இம்முறை கூடுதல் வாக்குகள் கிடைக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரால்தான் வெற்றியாளரின் வாக்கு வித்தியாசம் குறையப் போகிறது என்றும்கருதப்படுகிறது.
பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் மதுரை மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி காலை வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது.
கடந்த தேர்தல் நிலவரம்:
பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (திமுக) - 43,185.
எஸ்.டி.கே.ஜக்கையன் (அதிமுக) - 35,992.
சுந்தரராஜன் (தேமுதிக) - 12,038.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications